ட்விட்டர் தளமானது எலான் மஸ்க் வசம் சென்றது முதல் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. லோகோவில் இருந்த நீல நிற பறவைக்குப் பதிலாக வேறு லோகோவை மாற்றினார்.
அடுத்தடுத்த நாட்களில் ட்விட்டர் என்ற பெயரையே X என்று மாற்றி ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் என்றும் அறிவித்தார். அவ்வப்போது சந்தா திட்டம் மற்றும் கட்டணங்களை மாற்றி புதிது, புதிதாக அறிவித்து வருகிறார்.
இதுபோன்ற அறிவிப்புகளால் பயனாளர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தற்போது உச்சகட்டமாக மற்றுமொரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி எக்ஸ் தளத்தில் புதிதாக இணைவதற்கு, வருட சந்தா செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இனிவரும் நாட்களில்தான் இந்த திட்டம் நடைமுறைக்கு வரப் போகிறது. ஆனால் அது எப்போது என்னும் கேள்விக்கான விடை இன்னும் கிடைக்கப் பெறவில்லை.
இந்த கட்டண முறையானது தேவையற்ற பாட் மற்றும் ஸ்பேம்களை குறைப்பதற்காக என தெரிவித்துள்ளது. புதிதாக எக்ஸ் தளத்தில் இணைபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.83 செலுத்த வேண்டும்.
அதேபோல் புதிதாக இணைந்தவர்கள் ஏற்கனவே உள்ள பயனாளர்களைப் பின்தொடர முடியும் ஆனால் லைக், புக்மார்க் மற்றும் ட்வீட் செய்வதற்கு ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிகிறது.
எனவே எக்ஸ் தளத்தில் இணைய விரும்பும் புதிய பயனாளர்கள் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக இணைந்து விடுவது நல்லது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த பிரசாந்த்: கைகொடுத்த “நான் முதல்வன்” திட்டம்!
Thangalaan: ஆஸ்கர் உறுதி! ‘சீயான்’ விக்ரமின் பர்த்டே ட்ரீட்… புது வீடியோ ரிலீஸ்!
சிக்கலில் ஹர்திக் பாண்டியா… டி20 உலகக்கோப்பையில் இடம் பிடிப்பாரா?