ட்விட்டர் உரிமையாளர் ஆனதில் இருந்து எலான் மஸ்க் பற்றிய செய்திகள் தினமும் சமூகவலைதளங்களில் தீயாய் பரவுகிறது. அதே போல் அவரது ட்விட்டுகள் பல நேரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
அதேபோல், ஒரே ஒரு படத்தால் சமூக வலைத்தளத்தையே தற்போது உறையவைத்துள்ளார். சமூக ஊடகத்தில் பரபரப்பை தக்கவைத்துக்கொள்ளும் மஸ்க் அதே வரிசையில் இப்போதும் ஒரு ஆயுதத்தை வீசியுள்ளார்.
ஆயுதம் என்றால் கத்தியோ கடப்பாரையோ இல்லை. அது ரிவால்வர் துப்பாக்கி.
நேற்று (நவம்பர் 28 ) எலான் மஸ்க் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தில், அவரது படுக்கையின் மேஜையில் காஃபின் இல்லாத டயட் கோக்கின் நான்கு கேன்கள் இருந்தன. அதோடு இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் டெலாவேர் ஆற்றைக் கடக்கும் ஓவியம் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
மஸ்க் டயட் கோக்கை விரும்பி அருந்துபவர் என்பது பலருக்கும் தெரிந்ததே. அதேபோல், துப்பாக்கி உரிமைக்கு ஆதரவாக தனது கருத்தை முன்பே அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், எலான் மஸ்க் துப்பாக்கியை காட்டி மிரட்ட முயற்சிக்கிறாரா அல்லது துப்பாக்கியைக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்கிறாரா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உங்கள் மகனை தீவிரவாதி என்று அழைப்பீர்களா? பேராசிரியரை அலறவிட்ட மாணவன்!