பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் செயலியின் லோகோவை அதன் நிறுவனர் எலான் மஸ்க் இன்று (ஏப்ரல் 4) திடீரென மாற்றம் செய்து பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இன்றைய சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக ட்விட்டர் இருந்து வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என உலகில் நடக்கும் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் உடனடியாக இதில் பதிவிடப்படுகிறது.
எனவே தலைவர்கள் முதல் சாமானியர் வரை என உலகம் முழுவதும் சுமார் 55 கோடிக்கும் அதிகமானோர் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) விலைக்கு கடந்தாண்டு அக்டோபரில் வாங்கினார்.
அன்று முதல் தினமும் ட்விட்டரில் அதிரடியான கருத்துகளை வெளியிட்டு உலக மீடியாக்களின் கண்களை எந்நேரமும் தன்பக்கம் வைத்துள்ளார்.
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்க கட்டணம், நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக் என தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை எலான் மஸ்க் செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டர் செயலியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது.
ட்விட்டரின் அடையாளமாக கருதப்படும் நீல பறவை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின்(சீம்ஸ்) லோகோ வைக்கப்பட்டுள்ளது.
பிரபலமான ட்ரோல் மெட்டிரியலாக உருவகப்படுத்தப்படும் சீம்ஸ் புகைப்படத்தை கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ’புதிய CEO’ என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் எலோன் மஸ்க்.
மேலும் அவர் இன்று வெளியிட்ட ஒரு பதிவில், காரில் பயணிக்கும் சீம்ஸ், போலீஸ் அதிகாரியிடம் டிவிட்டரின் நீல நிற பறவையின் படம் பொறித்த அடையாள அட்டையைக் காட்டி, “அது பழைய புகைப்புடம்” என்று சொல்வது போல் பதிவிட்டிருந்தார்.
அன்று க்ளூ கொடுத்தவர் அதனையடுத்து தற்போது ட்விட்டர் லோகோவாகவும் அதனை மாற்றி தற்போது அதகளம் செய்துள்ளார்.
கணினி உள்ளிட்ட டெஸ்க்டாப் தளத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த சீம்ஸ், இன்னும் செல்போன் செயலியில் இடம் பெறவில்லை.
இந்த அதிரடியான லோகோ மாற்றத்தினை தொடர்ந்து தற்போது #TwitterLogo என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கலாஷேத்ரா சர்ச்சை: விசாரணைக் குழு அமைப்பு
மயிலம் தேர் திருவிழா: முருகப்பெருமான் வீதியுலா!
கடைசி நேரத்தில் பதற்றம்… முதல் வெற்றியை பதிவு செய்தது சி. எஸ். கே