எக்ஸ் பயனர்களுக்கு இலவச சந்தா: எலான் மஸ்க் அறிவிப்பு!

Published On:

| By Selvam

எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.

ட்விட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும்.

பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார். பிறகு, இதே போன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற தொடங்கின.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாலோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும்.

மேலும், 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாலோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் எக்ஸ் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ருதுவும் என்னை போல தான்…”: தோனி பகிர்ந்த சுவாரசிய தகவல்!

கிச்சன் கீர்த்தனா: முளைக்கீரை ஊத்தப்பம்

ராஜஸ்தான் அபார வெற்றி… ஆதிக்கம் செலுத்தும் சொந்த மண் அணிகள்!

”விலைவாசி குறைய வேண்டுமென்றால்…” : ஐடியா சொன்ன கதிர் ஆனந்த்