ஜூக்கர்பெர்க்குடன் கைகோர்த்த எலோன் மஸ்க்: எப்புரா???

சமூகவலைதளங்களில் தற்போது அதிகளவில் பேசப்படும் உலக பணக்காரர்களாக எலோன் மஸ்க்கும், மார்க் ஜூக்கர்பெர்க்கும் உள்ளனர். அதற்கு காரணம் இருவருக்கும் இடையே நடைபெற்று வரும் தொழில் போர் தான். டெஸ்லா மற்றும் டிவிட்டரின் உரிமையாளரான எலோன் மஸ்க்கும், மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஒருவருக்கொருவர் மாறி மாறி சவால் விட்டு வருகின்றனர்.

உலகளவில் பிரபலமான ட்விட்டரை வாங்கியதில் இருந்து  அதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார் எலோன் மஸ்க்.

இதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்து வரும் நிலையில் ட்விட்டருக்கும் போட்டியாக மெட்டாவின் த்ரெட்ஸ் ஐ அறிமுகப்படுத்தினார் ஜுக்கர்பெர்க். அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ளது த்ரெட்ஸ்.

இதனைக் கண்டு கடுப்பான மஸ்க், “ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக தவறாக பயன்படுத்துகிறார்” என்று ஜுக்கர்பெர்க் மீது குற்றம் சாட்டினார்.

இப்படி உலக பணக்காரர்கள் இடையே வெளிப்படையாக முட்டல் மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் ஒரு பயனர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பயனர், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி இருவரும் நட்புறவுடன் கைகோர்த்து கடற்கரையில் ஓடுவது போல புகைப்படங்களை உருவாக்கினார்.

மேலும் இதனை ’நல்ல முடிவு’ என்று குறிப்பிட்டு தனது சமூகவலைதள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் வெளியான இந்த பதிவை, இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்தும் வருகின்றனர். அதில் எலோன் மஸ்க்கும் ஒருவர்.

எலோன் மஸ்க் பயனர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தினைக் கண்டு ஸ்மைலி எமோஜியை பதில் அளித்துள்ளார்.

பயனர் வெளியிட்டுள்ள இந்த போட்டோ கற்பனையானது என்றாலும், முட்டி மோதிக்கொள்ளும் இரு பணக்கார  ஜாம்பவான்களை ’நண்பேண்டா’ ரீதியில் ஏஐ உருவாக்கியிருப்பது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மூன்று வகையான மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு!

24 மணி நேரம் டூ 24 ஆண்டுகள்… சுயம்வரம்: தமிழ் சினிமாவின் சாதனை படம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts