குட்டியை தாக்க வந்த முதலையை விரட்டி அடிக்கும் தாய் யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் குட்டை ஒன்றில் நீர் தேங்கியிருந்தது. அந்த குட்டையில் தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று அதன் குட்டியுடன் வந்துள்ளது.
தண்ணீரைக் கண்டவுடன் குட்டியானை அதில் விழுந்து விளையாடத் தொடங்கி விட்டது. தாய் யானை அருகில் நின்று தண்ணீரைத் தும்பிக்கையால் எடுத்து அதன் மீது தெளித்துக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் குட்டையில் பதுங்கியிருந்த முதலை ஒன்று குட்டியானையை தாக்க வெளிவந்தது. இதனைக் கண்ட தாய் யானை உடனடியாக முதலையை காலால் மிதித்து விரட்டியது. முதலையும் அந்த குட்டையை விட்டுத் தப்பித்து சென்றுவிட்டது.
முதலையை விரட்டிக் கொண்டிருக்கும் போது, குட்டி யானை தாய் யானையின் காலுக்கு இடையில் சென்று பத்திரமாக நின்றுகொண்டது.
தனது குட்டிக்காக தாய் விரைந்து செயல்படும் வீடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு,
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ”ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பை விட உலகில் எந்த சக்தியும் பெரிதாக இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் நெட்டிசன்கள், ”யானைகள் மிகவும் அற்புதமான உயிரினங்கள்”, “சிறிய எலி முதல் பெரிய யானை வரை தனது குழந்தையைப் பாதுகாக்கிறது”, “ஒரு தாயின் தைரியத்திற்கு எல்லையே இல்லை, ஏனென்றால் அவள் தன் குழந்தைகளைப் பாதுகாக்க எதையும் செய்வாள்” என்று கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தாய் யானை முதலையை தாக்கும் போது குட்டி யானை பாதுகாப்பாக ஒளிந்து கொள்வது பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது என்று சமூக வலைத்தள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
என் மீது பிரதமர் மோடிக்கு கோபமா? : அண்ணாமலை
அண்ணாமலைக்கு திமுக சொல்லும் பதில்!