யானைகளின் பாசம் எப்படியானது? உருக வைத்த வீடியோ!

Published On:

| By Kumaresan M

யானைகள் தன்னை வளர்க்கும் பாகனின் மீது அதீத அன்பு கொண்டிருக்கும். கோபம் வந்தாலும் முதலில் பாகனைத்தான் தாக்கும். அப்படி ஒரு வித்தியாசமான பாசம் கொண்டவைதான் யானைகள். இந்த நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி மக்களை உருக வைத்துள்ளது. Elephant bids farewell caretaker

வயதான பாகன் ஒருவர் நீண்ட நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த பாகனை பார்க்க அவர் பாசத்துடன் வளர்த்த யானை மருத்துவமனைக்கு வந்துள்ளது. மருத்துவமனைக்குள் தவழ்ந்து குழந்தை போல சென்று பாகனை பார்த்து அந்த யானை கண்ணீர் விட்டது.

பாகனின் உறவினரான பெண்,யானையின் துதிக்கையை பிடித்து பாகனின் கரத்தில் வைத்தார். இந்த காட்சி அனைவரையும் உருக வைத்து விட்டது.

இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த விவரம் இல்லை. தாய்லாந்து நாட்டில்தான் யானைகளை செல்லப்பிள்ளை போல வீட்டில் வளர்ப்பார்கள். எனவே, தாய்லாந்து நாட்டில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Elephant bids farewell caretaker

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share