புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகளை 6 மணி நேரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு சென்று பார்த்த வயதான தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. தங்களது தாயின் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்தவகையில் குட் நியூஸ் கரஸ்பாண்டண்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது 64 வயது மகளை 6 மணி நேரம் பயணம் செய்து 88 வயதான தாய் ஒருவர் பார்க்க சென்ற வீடியோ காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் வயதான தாய் மருத்துவமனைக்கு சென்று தனது மகள் சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே நின்று தனது கைத்தடியுடன் அவருக்கு கை அசைக்கிறார். பின்னர் அந்த அறைக்குள் சென்ற தாய் தனது மகளை ஆரத்தழுவி கட்டியணைத்தார். இந்த வீடியோ காட்சிகள் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு பலரும் உணர்வுப்பூர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர். Stealthgirl என்ற நபர், “அம்மாக்களின் அன்புக்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே. அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜவாஹிருல்லாவுடன் காலால் ஒரு செல்ஃபி- யார் இவர்?
“கள்ளச்சாராயம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்”: முதல்வர் ஸ்டாலின்