விடுமுறை நாட்களில் குட்டீஸ் முதல் சீனியர் சிட்டிசன்ஸ் வரை பிரியமான ஸ்நாக்ஸாக இருக்கிறது பர்கர்.
ஆனால், இதை அடிக்கடி சாப்பிடுவது ஆபத்து என்றும் அதற்கான காரணத்தையும் பட்டியலிடுகிறார்கள், உணவியல் ஆலோசகர்கள். பர்கர் பிரியர்களுக்கு அவர்கள் தரும் எச்சரிக்கை டிப்ஸ் இதோ….
“அடிக்கடி பர்கர் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். உடலில் கொழுப்புச்சத்தும் கூடும். அசைவ பர்கர் சாப்பிடும்போது, அதில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து (Low Density Lipoprotein) இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஒட்டிக்கொண்டு ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.
இதனால் இதய பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், இது மூளை பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சினையையும் ஏற்படுத்தலாம்.
பொதுவாக பர்கரில் பயன்படுத்தப்படும் மாமிச வகைகளைப் பதப்படுத்த அமோனியா உபயோகப்படுத்துவார்கள். இந்த அமோனியா சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
அடுத்ததாக பர்கரில் டாப்பிங்கில் பயன்படுத்தப்படும் சாஸ்களால் உணவு கெட்டுப்போகலாம். ஃபுட் பாய்சனிங் கூட ஆகலாம். மேலும், சர்க்கரை நோயும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
நாம் எப்போதும் சாப்பிடும் பன்னை விட பர்கருக்கு பயன்படுத்தப்படும் பன் சற்று இனிப்பாக இருக்கும். இந்த இனிப்பு வர பன்னில் ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் (Fructose Corn Syrup) பயன்படுத்துகிறார்கள்.
பர்கர் பன்னை அதிகம் சாப்பிடும்போது புற்றுநோய் வரும் ரிஸ்க்கூட அதிகரிக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கு மொத்தமாகவே 5-6 கிராம் உப்பு தான் தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு பர்கரை சாப்பிடும்போதே பூர்த்தியாகி விடும்” என்கிறார்கள்.
‘அப்போ பர்கரே சாப்பிடக் கூடாதா?’ என்றால் ‘சாப்பிடலாம். ஆனால், இப்படி…’ என்று விளக்கமளிக்கிறார்கள்…
“அதிக இனிப்பு இல்லாத பன்னில் நன்கு சமைத்த மீன், காய்கறி, காளான், பருப்பு பேட்டீஸ் பயன்படுத்தி பர்கர் செய்து சாப்பிடலாம்.
இதையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கலோரிகள் அதிகமாகி உடல் எடை கூட வாய்ப்புகள் உள்ளது. அதனால் 15 நாள்களுக்கு ஒருமுறை பர்கர் உண்பதே நல்லது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்க வடை, அங்க சப்பாத்தியா? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: காமராஜர் ஆட்சி… செல்வப் பெருந்தகை டூர்… காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி!
சென்னை, பெங்களூரு 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் செல்லலாமா? எப்படி?