தினமும் எழுந்து, அன்றாட வேலைகளைச் செய்து, அரக்கபரக்க அலுவலகத்துக்கு ஓடுகிறோம். மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு, இரவு தூங்குகிறோம்.
ஆனால், நாள் முழுக்க எனர்ஜியாக இருக்கிறோமா என்பதே கேள்வி. இதோ அதற்கான ஈஸி வழிகள்…
* காலை உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல. அப்படித் தவிர்த்தால் பித்தப்பையில் கற்கள் உருவாவது முதல் சர்க்கரை நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். காலை நேரத்தில் கட்டாயம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சூப், ரசம், ஜூஸ், மோர், இளநீர் வாயிலாகவும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தூக்கம் மிகவும் முக்கியமானது. இரவில் 10.30 மணிக்கு உறங்கி, காலை சூரியன் உதிக்கும் முன்னர் எழுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. தினமும், ஏழு முதல் ஒன்பது மணி நேர தடையற்ற உறக்கம் அவசியம்.
* தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா என ஏதாவது ஒரு பயிற்சியைச் செய்யுங்கள். தினமும், 50 மாடிப்படி ஏறி இறங்கினால்கூட போதும்.
இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை இரண்டு சதவிகிதம் வரை குறைக்க முடியும்.
* படிப்பு, வேலை, குடும்பச் சண்டை என எந்த ஒரு பிரச்சினைக்காகவும் மனதில் புழுங்குவது பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவாது; உடலுக்கும் கேடு, தியானம் செய்வது மன அழுத்தத்தைப் போக்கும்.
* புகையும் மதுவும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கக்கூடியவை.
புகை, மதுவைத் தவிர்ப்பவர்களுக்கு, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GTvsPBKS : சாய் கிஷோர் பந்துவீச்சில் பணிந்தது பஞ்சாப்!
இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!
’ஆர்சிபி ஆசீர்வாதம் வேணுமா? : அப்டேட் குமாரு
RCBvsKKR : ஒரு ரன்னில் பரிதாப தோல்வி… ஆபத்தில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு!