“ஸ்ட்ரெஸ் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கம். மூளை இதனோடுதான் இயங்க வேண்டியுள்ளது. ஸ்ட்ரெஸ் உங்கள் எதிரி இல்லை. உங்களை உருவாக்கி, உயர்த்தும் ஒரு விஷயம். அதுதான் உங்களைப் படுக்கையில் இருந்து எழ வைக்கிறது. நாள் முழுவதும் இயங்க வைக்கிறது” என்கிறார் உளவியல் நிபுணர்கள்.
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்… நம் வாழ்வில் நடந்த பல நல்ல விஷயங்கள் ஸ்ட்ரெஸ்ஸினாலேயே நடந்து இருக்கும்.
கல்லூரியில் சீட் வாங்கியது, வெற்றிகரமாகப் படித்து முடித்தது, பின்னர் வேலைக்குச் சென்றது என எல்லாவற்றிலுமே ஸ்ட்ரெஸ் என்பது இருந்திருக்கவே செய்யும். இவையெல்லாம் ஆரோக்கியமான ஸ்ட்ரெஸ் என்கிற வகைப்படும் இந்த ‘ஹெல்த்தி ஸ்ட்ரெஸ்’ என்பது உங்களுடைய வாழ்நாள் முழுவதும் உங்களை வழிநடத்திச் செல்லும்.
நம் வாழ்வின் எல்லா காலகட்டத்திலுமே ஓரளவு ‘ஹெல்த்தி ஸ்ட்ரெஸ்’ அவசியம். அதுவே உங்களை சரியான திசையில் பயணிக்க வைக்கிறது.
இந்த நிலையில், எப்போது ஸ்ட்ரெஸ் ஆரோக்கியமற்றதாக ஆகிறது தெரியுமா? அது நம்மை இயக்காமல் முடக்கிப்போடும்போதுதான்.
ஸ்ட்ரெஸ் நம்மை முடக்கினால் வாழ்க்கையே முடங்கிவிடும். இது நம்முடைய வாழ்க்கைக்கு நன்மை பயக்காது. உடலையும் மனதையும் பெரிய அளவில் பாதித்துவிடும். இந்த நிலை வராமல் இருக்க பின்வரும் விஷயங்களில் அவ்வப்போது நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டும். எப்படி?
“நமக்கு எது முக்கியம் எனப் பார்ப்பது. உலகில் இருக்கும் இரைச்சல் நம் மூளையை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது. உடலையும் மூளையையும் ஒருங்கிணைப்பது. அன்றாட வாழ்வைக் கட்டுப்படுத்தும் வரம்புகளைத் தாண்டி சிந்தித்து, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப பிராக்ட்டிக்கலான நடவடிக்கைகளை எடுப்பது.
ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளானால் நம்முடைய பெஸ்ட் என்பது நம் பின்னால் சென்று ஒளிந்து கொள்ளும். அப்படி ஒளிந்துகொண்ட பெஸ்ட்டை (செயல்திறன்/ அறிவுக்கூர்மை போன்ற) மீண்டும் முன்னிறுத்தி செயல்படுவது.
இந்த விஷயங்களையும் அவ்வப்போது ரீசெட் செய்துவிட்டால் நம் வாழ்க்கையானது இயல்பான உங்களின் செயல்பாட்டுடன் இணைந்து செல்ல ஆரம்பிக்கும்’’ என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கிரீன் சாலட்
இதுக்கும் அவரு தான் காரணமா? அப்டேட் குமாரு
T20 World Cup: இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த பரிசு!