பியூட்டி டிப்ஸ்: பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழிகள்!
கூந்தல் தொடர்பாக எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கவே செய்கிறது. குறிப்பாக பேன், பொடுகுத் தொல்லைகள்… “பேன் தொல்லை என்பது சாதாரண விஷயமல்ல. சீரியஸாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. Easy Ways to Get Rid of Lice and Dandruff
பேன் என்பது ஒரு கிருமி. அது தலையில் உள்ள ரத்தத்தை உறிஞ்சுகிறது. எனவே அதைக் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.
ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்” என்கிற சித்த மருத்துவர்கள் பேன், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட ஈஸி வழிகளையும் சொல்கிறார்கள்.
தினமும் தலைக்கு எண்ணெய் தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும்.
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால் பேன், பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும்.
வேப்பங்கொட்டைகளை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும்.
நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்பங் கொழுந்தை அரைத்து தடவவும் போடவும். ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.
ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்துக் காய்ச்சி, வடிகட்டவும். இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும். ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுத்தால், பேன், பொடுகு வந்துவிடும். பிறகு, சின்ன சீப்பினால் வாரவும்.
வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகு, ஈறு தொல்லை இருக்காது. வாரம் ஒரு முறை இந்த மருந்துகளைப் பயன்படுத்தினால், தலை சுத்தமாகும்.
வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.
குழந்தைகளுக்குப் பேன் தொல்லை இருந்தால், வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தடவிக் குளிப்பாட்டலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நம்ம மைண்ட் வேற அங்க போகுதே : அப்டேட் குமாரு
”இந்தி பேசக்கூடாதா?”: பத்திரிகையாளரிடம் சீறிய விஜய் சேதுபதி
”பிரதமர் வேட்பாளர் தேவையில்லை” : எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி
ஜெயிலர் 2 : ரஜினிக்காக காத்திருக்கும் நெல்சன்
Easy Ways to Get Rid of Lice and Dandruff