பட்டாசு கொளுத்துதலுடன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் ஒரு பண்டிகை தீபாவளி. பட்டாசுகளை கொளுத்தும் போது மாசுபாட்டிற்கும், அதன் விளைவாக சில நபர்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும்.
மூச்சுத் திணறலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி குறிப்புகள் பற்றி கீழே காண்போம்.
தீபாவளியின் போது கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலில் முதலுதவி செய்து விடுங்கள்.
முதலில் பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான, புதிய காற்று உள்ள பகுதிக்கு கொண்டு செல்வது மிக முக்கியமான செயலாகும்.
பாதிக்கப்பட்ட நபரை திறந்த ஜன்னல்கள் அல்லது மாசுபட்ட காற்றில் இருந்து விலக்கி வைக்கவும்.
மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் மூக்கு மற்றும் வாயை முகமூடியால் அல்லது துணியால் மூடிக்கொள்ளவும். இது சுவாசத்தை எளிதாக்க உதவும்.
ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு உள்ளவர்கள மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலரை பயன்படுத்தவேண்டும். விரைவான நடவடிக்கை எடுப்பது நல்லது.
ஒரு நபருக்கு கடுமையான சுவாச பிரச்சனை இருந்தால், அவர்களை உட்கார வைய்யுங்கள். சற்று முன்னோக்கி சாய்ந்து, முழங்காலில் கைகளை ஊன்றிக் கொள்ளவும். இந்த நிலை காற்றோட்டத்தை மேம்படுத்த உதவும்.
மேலே குறிப்பிட்டுள்ள வழிகள் மூலம் சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் சென்று அதற்கான அவசர உதவியை எடுத்துக்கொள்ளுங்கள். மாசு இல்லா தீபாவளியை கொண்டாடுங்கள்.
சுபஶ்ரீ
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன். கீர்த்தனா : டிரை ஃப்ரூட் லட்டு!