மனநலம் என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். நம்முடைய மனநலம் ஆரோக்கியமாக இருந்தால்தான், நாம் எதையும் சிறப்பாக செய்ய முடியும். சில நேரங்களில் ஓர் இறுக்கமான மனநிலையை உணர்ந்தால், அதிலிருந்து வெளியே வர ஈஸி வழிகள் இதோ…
மொபைல் போன்கள் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்; எந்நேரமும் சோஷியல் மீடியாவில் இருப்பது, மனநல பிரச்சினைகளில் முக்கியமானதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் மனதுக்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் மனநிலைகளில் என்ன குழப்பங்கள் இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுங்கள்; அவர் உங்களுடைய நம்பிக்கைக்கு உரியவராக இருப்பாரா என்பதை உறுதிப்படுத்தி கொள்வது அவசியம்.
உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள். இயற்கை என்பது மனதை அமைதிப்படுத்த கூடிய மிக முக்கியமான பங்களிப்பை செய்யும்.
வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் பறவைகள் வளருங்கள் அல்லது இடவசதி இருந்தால் மாடித்தோட்டம் அமையுங்கள். காக்கா, குருவிகள், புறா உள்ளிட்ட பறவைகளுக்கு உணவளியுங்கள்; அதுகூடும் இடங்களில் தாகத்திற்கு நீர் வையுங்கள்.
உங்களிடம் இருக்கும் பொருட்களில் தேவைக்கு போக, மிஞ்சியது இருந்தால், இல்லாதவர்களுக்கு தேடிச்சென்று கொடுங்கள். இது நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை உணர வைக்கும்.
நீங்கள் விரும்பிய புத்தகங்களை அல்லது பக்தி நூல்களை தினமும் குறைவான நேரம் வாசித்தாலும், அதை தினமும் செய்யுங்கள்.
தினமும் காலை உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடுங்கள்.
இதை நீங்கள் பின்பற்றி, மன அழுத்தம், மனச்சோர்வு மனக்கவலைகளில் இருந்து நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை பெற நல்வாழ்த்துகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்ன ராஜேஷ்…ஜெயிச்சிட்டியா? 9 ஆவது ரவுண்டில் ஸ்டாலின் போட்ட போன்!
சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – உண்மையான வெற்றி பாமகவுக்குதான் : ராமதாஸ்
ஏகலவ்யப் பள்ளிகளில் பிரச்சினை!!