பியூட்டி டிப்ஸ்: பாதவெடிப்பைப் போக்க ஈஸி வழி இருக்கு!

Published On:

| By Minnambalam Desk

சிலருக்கு பல வருடங்களாக பாதவெடிப்பு பிரச்சினை இருக்கும். என்னென்னவோ க்ரீம்கள், ஆயின்மென்ட் போட்டும் சரியாகாது. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட ஈஸி வழியைச் சொல்கிறார்கள், அழகுக்கலை ஆலோசகர்கள். Easy way to get rid of cracked feet

“பாதவெடிப்புக்கான எந்தச் சிகிச்சையைச் செய்தாலும் முதலில் பாதங்களை நன்கு கழுவித் துடைத்த பிறகே செய்ய வேண்டும். பாதவெடிப்புக்கான சிகிச்சைகளை இரவு நேரத்தில் செய்வது சிறந்தது.

வெதுவெதுப்பான நீரில், சிறிது கல் உப்பு சேர்த்து கால்களை சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். கடைகளில் பியூமிஸ் ஸ்டோன் என்று கிடைக்கும். அதை வைத்து கால்களைத் தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். பிறகு கால்களைத் துடைக்கவும்.

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை லேசாக சூடுபடுத்தவும். கிழங்கு மஞ்சளைக் காயவைத்து அரைத்த பொடியை அதில் சேர்த்துக் குழைத்து தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பாதங்களில் தடவி வரலாம்.

சிலருக்கு பாதங்களில் உள்ள வெடிப்பானது கருமையாக இருக்கும். இவர்கள் வெந்நீரில் கல் உப்புடன், அரை மூடி எலுமிச்சைப் பழச்சாறும் கலந்து கால்களை ஊறவைத்துத் தேய்த்தால் கருமை மறையும். Easy way to get rid of cracked feet

நான்கு டீஸ்பூன் வாசலைனில் நான்கு டீஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்துகொள்ளவும். அதில் வைட்டமின் இ கேப்ஸ்யூலையும் உடைத்துக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தினமும் காலையிலும் இரவிலும் உபயோகிக்கலாம். குளித்ததும் கால்களில் தடவிக்கொண்டு, சாக்ஸ் அணிந்துகொள்ளலாம்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதவெடிப்பு பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் வாசலைனில் தேங்காய் எண்ணெய் கலந்துவைத்துக்கொண்டு அவ்வப்போது தடவிக்கொள்ளலாம்.

கடைகளில் பாரஃபின் வாக்ஸ் என்று கிடைக்கும். அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, தண்ணீர் உள்ள இன்னொரு பாத்திரத்தின் மேல் வைத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கினால் மெழுகு உருகும். அதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஏதேனும் ஒன்றில் றிது கலந்து வெடிப்புகளின் மேல் தடவி, மேலே சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கலாம்.

தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கிளிஞ்சல் மெழுகையும் பாத வெடிப்பின் மீது தடவி வரலாம். அதுவும் நல்ல பலனைத் தரும் என்கிறார்கள். Easy way to get rid of cracked feet

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share