பியூட்டி டிப்ஸ்: முகச் சுருக்கங்களைப் போக்க… உங்களுக்கான ஈஸி ஃபேஸ் பேக் இதோ!

டிரெண்டிங்

தற்போதைய வாழ்க்கை முறை, மற்றும் தட்பவெப்ப சூழல்களால் இளம் வயதிலும் சிலருக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

சரியான தூக்கம் இல்லாமல், ஆரோக்கியமான உணவை சாப்பிடாமல், தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் இருப்பதன் மூலம் சருமத்தில் கோடுகளும், சுருக்கங்களும் ஏற்படுவதைக் காண முடிகிறது.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு சரும சுருக்கங்களை சரி செய்யலாம்.

அது குறித்து வழிகாட்டல்கள் இதோ…

அரை வெள்ளரிக்காய், சர்க்கரை மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு கலந்த பாகு, கற்றாழை ஜெல், சிக்கரி கலக்காத ஃபில்டர் காபி பவுடர், அவகேடோ எண்ணெய், முகத்துக்குப் பயன்படுத்தும் பவுடர், டிஷ்யூ பேப்பர்.

முதலில், முகத்தில் இருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்யும் க்ளென்சிங் (cleansing) முறையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு, வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி எடுத்து, சருமத்தில் வட்ட வடிவில் தேய்த்து சுத்தம் செய்துகொள்ளவும்.

மூக்கில் இருக்கும் வொயிட் ஹெட்ஸை (white heads) நீக்க, மூக்கின் மீது கொஞ்சமாக பவுடர் போட்டு, பின்பு தயார் செய்து வைத்திருக்கும் எலுமிச்சைச் சாறு – சர்க்கரைப் பாகுக் கலவையை மூக்கின் மீது போட்டுள்ள பவுடரின் மேல் மெழுகு (wax) போல தடிமனாக அப்ளை செய்யவும்.

5 நிமிடங்களுக்குப் பின், டிஷ்யூ பேப்பர் கொண்டு அதைப் பிடுங்கி எடுப்பதுபோல சற்று வேகத்துடன் அகற்றவும். இதன் மூலம் வொயிட் ஹெட்ஸ் நீங்கிவிடும். அதிக வொயிட் ஹெட்ஸ் இருப்பவர்கள், இதுபோல் இன்னொரு முறை செய்து நீக்கலாம்.

அவகேடோ எண்ணெயை முகம் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயில் புரதம், வைட்டமின் ஈ போன்றவை இருப்பதால் சரும சுருக்கங்களைச் சரி செய்வதற்கு உதவி புரியும்.

அவகேடோ எண்ணெய் இல்லையென்றால், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தினமும் கூட இந்த எண்ணெயில் ஏதேனும் ஒன்றை சருமத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்குப் பின்பு குளிக்கலாம். சருமம் பொலிவு பெறும்.

மசாஜ் செய்த பிறகு, பேக் ஒன்று போட வேண்டும். அதற்கு, கற்றாழை மற்றும் சிக்கரி கலக்காத ஃபில்டர் காபி பவுடர் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் கலந்து முகத்தில் பேக் ஆகப் போடும்போது, சருமத்தில் கொலாஜென் (Collagen) அதிகரிக்கும்.

இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் சருமத்தை பொலிவாக ஆக்கும். இந்த பேக் காய்ந்ததும் 10 நிமிடங்களில் கழுவவும்.

இதை அடிக்கடி செய்து வருவதன் மூலம் சருமத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்கள் குறைவதுடன் சருமம் பொலிவாக, ஆரோக்கியமாகக் காணப்படும்.

முக்கியமான விஷயம்… இது சருமத்துக்கான பாரமரிப்புதான். வாழ்க்கை முறையை சரிசெய்துகொள்வதுதான் சரும ஆரோக்கியத்துக்கான நிரந்தரத் தீர்வு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது: ஆளுநர் ரவி காட்டம்!

மகன் நிபந்தனையை மீறிய வி.பி. துரைசாமி

ஜூன் 4 தேர்தல் ரிசல்ட்… ஜூன் 1ல் ஸ்டாலின் ப்ளான்!

ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *