நெடுந்தூரப் பயணங்கள் தொடங்கி வீட்டின் கழிவறைக்குச் செல்லும் நேரங்களில்கூட இயர் பட்ஸ் பயன்பாடு என்பது பலருக்கு முக்கியத்துவம் ஆகிவிட்டது. சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்லும்போதும் இயர் பட்ஸ். மொபைல் ஃபோன்களை கையில் வைத்துக்கொண்டு இருப்பது போலவே சமீப காலமாக பலர் இயர் பட்ஸ்களை கையில் வைத்துக்கொண்டே அலைய தொடங்கி விட்டார்கள்.
இந்த இயர் பட்ஸ் பயன்பாட்டால் பலருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்படுவதாகவும், முற்றிலும் அதைத் தவிர்ப்பது காதுகளின் நலனுக்கு வழிவகை செய்யும் என்கிறார்கள் காது, மூக்கு மற்றும் தொண்டை நல மருத்துவர்கள்.
“இயர் பட்ஸை பயன்படுத்தும்போது அதன் ஒலியும், அதிர்வும் காதுகளுக்குள் நேரடியாகச் செல்லும். இதனால் காது மற்றும் மூளைப் பகுதியில் உள்ள நரம்புகள் முற்றிலும், கொஞ்சம் கொஞ்சமாக சேதம் அடைய ஆரம்பிக்கும். இதனால் நாளடைவில் காது கேட்காமல் போக வாய்ப்பு ஏற்படும்.
தொடர்ந்து இயர் பட்ஸை பயன்படுத்தும்போது காதின் மயிர் கால்கள் மற்றும் உட்புற தோல் பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும். இதனால், காதில் ஒருவகையான இரைச்சல் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். இப்படி ஏற்படும் பட்சத்தில் இந்த பாதிப்புக்கு ஆளான நபர் உடனடியாக இஎன்டி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.
எனவே, முடிந்த வரை இயர் பட்ஸை தவிர்ப்பது நல்லது. பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். அதுவும் அதிக சத்தம் வைக்காமல் அளவான சத்தத்தில் வைத்து உபயோகித்துக் கொள்ளலாம்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு எதிராக யோகி – அவசர கூட்டம் கூட்டிய மோடி… பாஜகவில் அடுத்த பூகம்பம்!
அதான் பயமா இருக்கு : அப்டேட் குமாரு
எனக்கும் வேலுமணிக்கும் பிரச்சனையா? – அண்ணாமலையை விளாசிய எடப்பாடி
ஜூன் 14ஆம் தேதி முப்பெரும் விழா : திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!