ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் ஆட்சியாளர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் 30 வயது மகள் துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா முகமது ரஷீத் அல் மக்தூம். இவர் கடந்த ஆண்டு மே மாதம், ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற தொழிலதிபரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், துபாய் இளவரசி தனது கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்தார்.
இவர் கடந்த ஜூலை மாதம் தனது கணவரை டைவர்ஸ் செய்வதாக இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரங்கமாக அறிவித்தார். விவாகரத்து செய்து இரு மாதங்கள் ஆகிறது. இதற்கிடையே, துபாய் இளவரசி மெக்ரா எம்- 1 என்ற பர்பியூம் பிராண்டை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் இரு நாள்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாசனை திரவியத்துக்கு டைவர்ஸ் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதிய வாசனைத் திரவியத்திற்கான அறிவிப்பை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கான டீசர் இன்ஸ்டாகிராமில் வெளியான உடனேயே டிரெண்டானது.
டீசரில் உடைந்த கண்ணாடி, கருமையான இதழ்கள் மற்றும் கருஞ்சிறுத்தை போன்ற காட்சிகள் காட்டப்பட்டன. உடைந்த கண்ணாடி எல்லாம் இருப்பதால் இது என்னவாக இருக்கும் என்றும் அறிய மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் தான் அவர் வாசனைத் திரவியம் குறித்த போட்டோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில், டைவர்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட ஃபர்பியூம் பாட்டில் ஒன்று இடம் பெற்று இருந்தது. டைவர்சுக்கு பிறகும் முன்னாள் கணவரை, கடுப்பேற்றும் வகையில், துபாய் இளவரசியின் செயல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!
விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு : உதயநிதி ரியாக்ஷன்!