ட்ரை ஃப்ரூட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊற வைத்தோ சாப்பிடலாம் அல்லது காலை உணவு, வேலை இடைவேளை நேரங்கள், மாலை 5 – 6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்கிற நிலையில், ட்ரை ஃப்ரூட் பைனாப்பிள் ரோல் செய்து சுவையுங்கள்.
என்ன தேவை?
சதுரமாக நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகள் – 2 கப்
தர்பூசணி விதை – ஒரு கப் (வறுத்துப் பொடிக்கவும்)
சர்க்கரை – ஒரு கப்
குங்குமப்பூ – சிறிதளவு
வெதுவெதுப்பான பால் – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பாதாம் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரியைக் கலந்துகொள்ளவும். வாணலியில் அன்னாசிப்பழத் துண்டுகளுடன் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்துக் கிளறி ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு அன்னாசிப்பழ விழுது, சர்க்கரை சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, 5 – 7 நிமிடங்கள் கிளறவும். இதனுடன் தர்பூசணி விதைப்பொடி சேர்த்து நன்கு கிளறவும் (20 – 25 நிமிடங்கள் வரை). பிறகு, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை 10 சம பாகங்களாகப் பிரித்து சிலிண்டர் வடிவில் உருட்டவும். ஒவ்வொரு உருண்டையையும் நட்ஸ் கலவையில் புரட்டி எடுத்துப் பரிமாறவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தும் பயன்படுத்தலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட் பிக்கிள்!
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
ஆகஸ்ட் 31-ல் ரேஷன் கடைகள் இயங்குமா? வெளியான முக்கிய அப்டேட்!
நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!