“பியூட்டி சாதனங்களை மட்டுமே கொண்டு நம் சருமத்தை இளமையான தோற்றத்தில் வைத்திருக்க முனைவதைக் காட்டிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சருமத்துக்கான சரியான முன்னெடுப்புகள் ஆகியவற்றை மேற்கொண்டால் சருமம் என்றும் இளமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறும் காஸ்மெட்டாலஜிஸ்ட்ஸ் “நிறைய தண்ணீர் அருந்துவது இளமையை மீட்டெடுக்க நிச்சயம் உதவும்” என்கிறார்கள்.
மேலும், “நார்ச்சத்து நிறைந்த உணவுகள், வைட்டமின்-சி இருக்கும் உணவுகள், பழங்கள், பருப்பு வகைகள், தானிய வகைகள் ஆகிவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. எனவே, சாட் உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினால் சருமம் மூப்படைவதை நிச்சயம் தள்ளிப் போட முடியும்.
முக்கியமாக, உடல் ஆரோக்கியத்துக்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சரும ஆரோக்கியத்துக்கும் தண்ணீரும் மிக அவசியம். உடலின் முழுமையான வளர்சிதை மாற்றத்தைத் தண்ணீர்தான் ஊக்குவிக்கும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்கவில்லையெனில் வளர்சிதை மாற்ற நிகழ்வை ஊக்குவிக்கத் தேவையான தண்ணீரை, உடலானது சருமத்திலிருந்து ஆங்காங்கே உறிஞ்சிக்கொள்ளும். இதனால், சருமம் மிகவும் வறண்டு போவதோடு வயதான தோற்றம் உண்டாகும். சருமத்தில் சுருக்கங்களும் சீக்கிரமாக வந்துவிடும்.
இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிப்பது அவசியம். ஒரு நாளுக்கு இரண்டு முதல் நான்கு லிட்டர் வரைக்கும், உடல் எடை, உடல் உழைப்புக்கு ஏற்ப தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம்’’ என்கிறார்கள் காஸ்மெட்டாலஜிஸ்ட்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கற்பூரவள்ளி சட்னி
எங்கெங்கு கனமழை… எங்கெங்கு மிக கனமழை? அலர்ட் மக்களே…
கைத் துப்பாக்கியை குழந்தை போல கழுவும் ’வேற லெவல்’ அதிர்ச்சி! சட்டம் ஒழுங்கு சாம்பிள்!