அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
அதிகபட்சமாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 14.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 12ஆம் தேதி வரை தொடர்ந்து வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை.
வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிரைவர் ஷர்மிளா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
சாய் கிஷோருக்கு அடித்த ஜாக்பாட்: TNPL ஏல வரலாற்றில் இதுவே முதல்முறை!
Thalapathy 69: ‘அதெல்லாம் நம்பாதீங்க’ விஜயை இயக்கப்போவது இவர்தான்!