ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… காலை உணவைத் தவிர்க்காதீர்கள்!

Published On:

| By Minnambalam Desk

Don't skip breakfast to lose weight

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால், ‘உணவைத் தவிர்த்தாலும் உடல் எடை ஏறுகிறதே’ எனக் கவலைப்படுவார்கள். இதற்கு அறிவியல் விளக்கம் உண்டு என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

“இரவு நெடுநேரம் நாம் சாப்பிடாமல் இருப்போம். நாம் சாப்பிட்ட உணவு முற்றிலும் இரைப்பையில் அரிக்கப்பட்டு வெளியேறிய பிறகு, அமிலம் சுரக்க ஆரம்பிக்கும். அதிகாலை மூன்று மணி அளவில்தான் அதிக அளவு அமிலம் சுரக்கிறது. காலையில் நாம் எழும்போது இரைப்பை அமிலத்தோடு காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் தீனி போடாமல் தவிர்த்தால், மேலும் மேலும் அமிலம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

விளைவு, மதிய உணவைச் சாப்பிடும்போது, அதிக அளவு அமிலம் இருப்பதால், உணவுத்தேவை அதிகமாகி, மதியம் நன்றாகச் சாப்பிட்டு விடுவோம். மாலை நொறுக்குத்தீனிகள், இரவு மீண்டும் ஹெவியான உணவு என முற்றிலும் தவறான உணவு முறைக்குப் பழக்கப்படுத்துவதால், உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை கூடுவது மட்டும் அல்ல, செரிமான உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. Don’t skip breakfast to lose weight

இந்த நிலையில், காலை எப்போதுமே ஆரோக்கியமான, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவு எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளலாம். சாப்பிட்ட பின்னர், உடனே பழங்கள் சாப்பிடுவதும் தவறு. உணவைச் சீரான இடைவெளிகளில் பிரித்துச் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் எடையைக் குறைக்கலாம்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share