ஆண் – பெண் உறவின் அடிப்படை காமம் என்றாலும், அதில் இங்கு பலரும் தயக்கங்களுடன்தான் ஈடுபடுகின்றனர். கணவனும் சரி, மனைவியும் சரி… உடலுறவு சமயத்தில் ஒருவரை ஒருவர் ஆடை இல்லாமல் பார்ப்பதற்கு விரும்புகிறார்கள் என்றாலும், அதைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் ஒருவிதத் தயக்கம் உள்ளது.
குறிப்பாக, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களிடம் இத்தயக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு, நமது சமூகக் கட்டமைப்பும் ஒரு முக்கியமான காரணம் என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்ஸ் இந்தத் தயக்கத்தை உடைக்கச் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து அவர்கள் பகிர்பவை இங்கே…
“நம் சமூகத்தில், செக்ஸ் என்பது ஓர் அசிங்கம், ஆபாசம், அதை வெளியில் பேசக்கூடாது, அதில் ஆர்வம் காட்டும் பெண்கள் நல்ல பெண்கள் அல்லர் என்ற பொதுப்புத்தி தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வதற்காக செக்ஸ் பண்ணலாமே தவிர, அதில் ஆர்வம் காட்டுவது தவறு என்ற உணர்வு நிலைக்குள்ளேயே ஒரு பெண் தொடர்ந்து வைக்கப்படுகிறார். இதன் காரணமாக, பெண்கள் பலரிடமும் செக்ஸ் குறித்த சரியான புரிதலோ, ஆரோக்கியமான உரையாடலோ இருப்பதில்லை.
செக்ஸில் ஈடுபாடு காட்டுவது, செக்ஸ் குறித்த தனது விருப்பங்கள் மற்றும் தேவைகளைக் கணவரிடம் பகிர்வது போன்றவை நல்ல பெண்கள் செய்யக்கூடிய செயல்கள் அல்ல என்று தொடர்ந்து பெண்ணுக்குக் கற்பிக்கப்படுவதால், செக்ஸ் குறித்த நெகட்டிவ் மைண்ட்செட் பெண்களிடம் உண்டாகிறது.
இதுவே, செக்ஸ் வாழ்க்கையில் அவர்களுக்குத் தயக்கத்தையும் உண்டாக்குகிறது. கணவன் – மனைவி ஆகிய இருவருமே தங்களுக்கு இடையிலான தாம்பத்ய உறவை நன்றாக அனுபவிக்க வேண்டியது அவசியம். செக்ஸ் என்பதை எதிர்மறை விஷயமாகவே பார்க்காமல், அது மகிழ்ச்சிக்கான ஒரு விஷயம் என்பதை இருவரும் முதலில் உணர வேண்டும். தங்களது செக்ஸ் தேவைகள் குறித்து பரஸ்பரம் தெரிந்துகொண்டு அதற்கேற்ப கணவன், மனைவி இருவரும் செயல்பட்டால் செக்ஸ் வாழ்க்கை சிறக்கும்.
பெண்களைப் பொறுத்தவரையில், தங்கள் உடலைப் பற்றிய பிரஞ்ஞை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். `நம் முகத்தோற்றம் சிறியதாக உள்ளது, பற்களின் அமைப்பு சரியாக இல்லை, மார்பகங்கள் சிறியதாக உள்ளன’ என்பன போன்ற தன்னம்பிக்கை குறைவான எண்ணங்கள் பெண்களுக்கு இருந்தால், இதன் காரணமாகவும் தங்கள் இணையிடம் ஆடையின்றித் தங்கள் உடலைக் காட்டுவதில் அவர்களுக்குத் தயக்கம் உண்டாகும். அதுவே பெண்கள் செக்ஸில் உச்சக்கட்டம் அடைய இயலாமல் இருப்பதற்கான காரணமாகவும் அமையும்.
ஆண்களும், `நமக்கு ஆணுறுப்பு சிறியதாக உள்ளது, நமக்கு உடற்பருமன் பிரச்னை இருக்கிறது’ என்றெல்லாம் நினைத்துக் கவலைப்படத் தொடங்கினால், இவை போன்ற எண்ணங்களும். உடலுறவின்போது ஆடையின்றி தங்கள் உடலைக் காட்டுவதில் அவர்களுக்குத் தயக்கத்தை உண்டாக்கும்.
எனவே, ஆண்களும் சரி, பெண்களும் சரி… தயக்கம் ஏதுமின்றித் தங்களது உடலை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். உடற்பருமன் பிரச்னை இருந்தால், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கு முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம். அதே சமயம், ஒல்லியானதற்குப் பிறகுதான் செக்ஸ் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்காமல் மகிழ்ச்சியாக இணையுடன் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடலாம்.
கணவன், மனைவி இருவரும் எப்போதும் ஒரே மாதிரி செக்ஸ் வைத்துக்கொண்டால், அது ஒருவித அலுப்பைக் கொடுத்துவிடும். எனவே, சில நேரங்களில் ஆடையுடனும், சில நேரங்களில் ஆடை இல்லாமலும் இணையுடன் உறவு கொள்ளலாம். இப்படிப்பட்ட முயற்சிகள் இணையை அதிகம் ஈர்க்கும். இதன் காரணமாக இருவருக்கும் இடையிலான அன்பும் நெருக்கமும் வலுவாகும்’’ என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்
கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி
புரட்டாசில லட்டு சாப்பிடக்கூடாதா?: அப்டேட் குமாரு