பியூட்டி டிப்ஸ்: செல்ஃப் குரூமிங்… செய்துகொள்ள தயக்கம் வேண்டாம்!
ஒருவர் தன் தோற்றத்தைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்த சுயமாக செய்துகொள்ளும் நடவடிக்கைகள் `செல்ஃப் குரூமிங்’ (Self Grooming). இது ஆண், பெண் என இருபாலருக்குமானது.
செல்ஃப் குரூமிங் ஏன் அவசியம், அதை முன்னிறுத்தும் கேலி, கிண்டல்களை எப்படி கடந்து வர வேண்டும்?
“First Impression is the best Impression என்போம். நம் வார்த்தைகள், செயலைத் தாண்டி முதல் பார்வையில் நம் மேல் மதிப்பீடு ஏற்படுத்துவது நம் தோற்றம் என்பதை மறுப்பதற்கில்லை.
அதற்கு கைகொடுக்கும் செல்ஃப் குரூமிங்கில் ஸ்டைலிங் என்பதைத் தாண்டி, அதில் சுய ஒழுக்கமும், சுய சுகாதாரமும் இருக்கும்.
செல்ஃப் குரூமிங்கால் சமூகம், ஆரோக்கியம் மற்றும் உளவியல் சார்ந்து பல நன்மைகள் உள்ளன” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
மேலும், “சமூகம் சார்ந்து என்பதில், அலுவலகம், வெளியிடங்கள் என்று நாம் செல்லும் இடங்களில், ‘அந்தப் பொண்ணா/பையனா… பார்க்கவே புரொஃபஷனல் லுக்ல நீட்டா இருப்பாங்க’ என்று நம்மை பற்றிய நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.
ஒருவருக்கு மற்றவர் தரும் மரியாதை அவரை மேலும் உத்வேகமிக்கவராக மாற்றும். ஆரோக்கியம் எனும்போது, நேர்த்தியாக வெட்டப்பட்ட நகங்களில் இருந்து அனைத்து சுய சுகாதாரமும் ஆரோக்கிய காரணிகளாக அமையும்.
உளவியல் ரீதியாக, நம் தோற்றம் பிறரிடம் நம்மைப் பற்றிய பாசிட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்துவது நம் மீது நமக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
உதாரணமாக, பலர் முன்னிலையில் இருவர் பேச அழைக்கப்படுகிறார்கள். ஏனோதானோவென்று உடை, சீராக இல்லாத ஹேர் ஸ்டைல் என்று இருப்பவருக்கு, ‘அய்யய்யோ… இன்னிக்கு நான் சரியா டிரஸ் பண்ணலையே’ என்று ஒரு பதற்றம் ஏற்படும்.
அதுவே செல்ஃப் குரூமிங் செய்து கொண்டவருக்கு, ஃபார்மல் உடை, நேர்த்தியான மேக்கப், பாவனை எல்லாம் ஒரு முதல்கட்ட நம்பிக்கையை அளிக்கும்.
ஆண்களைவிட பெண்கள்தான் செஃல்ப் குரூமிங்கில் அதிகம் கவனம் செலுத்துபவர்கள் என்பதால் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாவதும் உண்டு.
விமர்சனங்களைப் பொறுத்தவரை நேர்மறையான விமர்சனம், எதிர்மறையான விமர்சனம் என இரண்டு வகை உள்ளன.
உங்கள் தோற்றத்தின் மீது ஒருவர் வைக்கும் விமர்சனம், அவரது இயலாமை, பொறாமையின் வெளிப்பாடாக இருந்தால் அது எதிர்மறை விமர்சனம்; கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்.
மொத்தத்தில் நேர்மறையான எண்ணம், தன்னம்பிக்கை, உத்வேகம், மற்றவர் தரும் மரியாதை ஒருவரின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதோடு அவரை வெற்றியாளராகவும் மாற்றும்… செஃல்ப் குரூமிங் அதற்கு கைகொடுக்கும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 ஆயிரமா? 10 ஆயிரமா?: அப்டேட் குமாரு