பொதுவாக புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் டீ, காபி குடிக்கிறோம். ஆனால், டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
உதாரணத்துக்கு… நாம் பயன்படுத்தும் டீ எல்லாமே டஸ்ட் டீதான். முதல் தரம், இரண்டாம் தரம் என நான்கு வகைகளில் தேயிலை கிடைக்கும். மூன்றாம் தரமான டஸ்ட் தேயிலை மட்டுமே, நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நான்காம் தரத் தேயிலைத் தூள்கள் தெருக்களில் உள்ள தேநீர்க் கடைகளுக்கு செல்கிறது. டஸ்ட் தேயிலையில் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், கலப்படங்கள் சேர்க்க வாய்ப்புகள் அதிகம். தரமான டீயைக் குடித்தால் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் குறைவு.
காபியில் உள்ள காஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால் புகை, சிகரெட், மது போல், காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்சினை வரலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம். செரிமான மண்டலம் பாதிக்கப்படும். அஜீரணக் கோளாறு, வாய்வுப் பிரச்னை ஏற்படும். நரம்பு மண்டலப் பிரச்சினைகளும் வரும். பசியே எடுக்காது. தாமதமாகச் சாப்பிட நேரிடும்.
இந்த நிலையில், உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்கலாம். டீ 100 மில்லி அளவும், காபியை அரை டம்ளர் அளவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் குடிக்கலாம். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக் கூடாது என்று வலியுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: இறால் துவையல்
மாமல்லபுரத்தில் பயங்கரம்… கார் மோதி 5 பெண்கள் பலி!
“நீ கூட்டிட்டு வந்த ஆளுங்க கை தட்டல பாத்தியா” :சூரியை கிண்டல் செய்த இளையராஜா