உடல் இளைக்க வேண்டும் என்பதற்காக சரியாகச் சாப்பிடாமல் இருப்பவர்களே இன்று அதிகம். அதுவரை இயல்பாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தினசரிப் பழக்கத்தை மாற்றி திடீரென சாப்பிடாமல் இருக்கும்போது இந்த அணுகுமுறை, மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால், முதலில் பாதிக்கப்படுவது தலைமுடிகள்தான். அடுத்ததாக, கண்கள் பாதிக்கப்படும். பொதுவாக, எதிலுமே மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் விளைவு தெரியும். எனவே, சுறுசுறுப்பாக வலம் வர வேண்டியவர்கள், சோர்வாகக் காணப்படுவார்கள். எனவே, நேரத்துக்கு சத்தாகச் சாப்பிட வேண்டியது அவசியம்.
எடையைக் குறைக்க உடற்பயிற்சிகள் செய்வதற்கெல்லாம் நேரம் கிடையாது என்று சொல்லி உணவை ஸ்கிப் செய்து, தடாலடியாக எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கூந்தல் மற்றும் சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும். திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் வொர்க்கவுட்களை மேற்கொள்ளுங்கள்.
அதிக எண்ணெய் போன்றவை சேர்க்காமல் சமச்சீரான உணவை உண்ணுங்கள். இப்படி, ஆரோக்கியமான வழியில் உடலை ஃபிட்டாக வைக்கும்போது, உடல் இளைக்கும்; மனதும் ரிலாக்ஸாக இருக்கும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
நீட் பிஜி நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு: மாணவர்கள் ஷாக்!
குழப்பத்தில் எடப்பாடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி பதில்!
சென்னை வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு