மேக்கப் விஷயங்கள் உட்பட நமக்குத் தேவையான எல்லா செய்திகளுமே சமூக வலைதளங்களில் எளிதாகக் கிடைப்பதால், அவற்றின் நம்பகத்தன்மைக்குப் பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
தன் சொந்த அனுபவங்களைச் சொல்பவரின் ஆலோசனைகள், எல்லோருக்கும் பயன்தராது. ஒருவரின் சருமத்துக்கு ஒத்துவரும் அழகு சாதனங்கள் மற்றவர்களுக்கும் ஒத்துப்போகும் என்பதில் உறுதி கிடையாது.
குளிர்காலத்துக்கான அழகுக் குறிப்புகள், கோடைக்காலத்தில் உதவாமல் போகலாம். அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதை யார் சொல்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். துறை சார்ந்த வல்லுநர்கள், நம்பிக்கையான மருத்துவர்களின் அனுபவங்களை நம்பலாம். இதுவே, அனுபவஸ்தர்கள் சொல்லும்பட்சத்தில், துறை சார்ந்தவர்களிடம் உறுதிசெய்து பயன்படுத்தலாம்.
உதாரணத்துக்கு, சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால், அது உண்மையில்லை. சின்ன வெங்காயத்தில் `சல்பர்’ எனப்படும் கந்தகச் சத்து இருப்பதால் அதைத் தலைமுடியில் பயன்படுத்தும்போது பெரும்பாலானோருக்கு முடி உதிர்வு பிரச்னை ஏற்படும்.
சிறு வயதிலேயே முன் நெற்றியில் வழுக்கை உள்ளவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ளும்போது, இருக்கும் கொஞ்சநஞ்ச முடியையும் மெலிதாக்கிவிடும். முடி அறுந்து உதிரத் தொடங்கும். சிலருக்கு சின்ன வெங்காயம் நல்ல பலனை கொடுத்திருக்கலாம்.
ஆனால், எல்லோருடைய தலைமுடியின் தன்மையும் ஒரே மாதிரி இருக்காது என்பதால் சின்ன வெங்காயம் பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருப்பதுடன், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் உதட்டின் கருமை நிறத்தைப் போக்க, தக்காளி அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் உப்பு அல்லது சர்க்கரையைத் சேர்த்து சிலர் பயன்படுத்துவார்கள். தக்காளி, எலுமிச்சை, உப்பு, சர்க்கரை போன்றவற்றை அழகுக்காக நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது.
ஏனெனில், தக்காளி மற்றும் எலுமிச்சையிலுள்ள அமிலம், முகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, இவற்றுடன் உப்பைச் சேர்க்கும்போது, இது எதிர்வினையைத் தரும். இதனால் பலருக்கும் சருமத்தில் சுருக்கம், முகப்பருக்கள் வரக்கூடும். மிகவும் மென்மையான உதட்டில் எலுமிச்சை, உப்பு, தக்காளி போன்ற வற்றைத் தேய்த்தால், உதடு புண்ணாக வாய்ப்புள்ளது.
உப்புக் கரைசலை முகத்தில் தடவினால் சருமத்தில் சுருக்கங்கள் வரலாம். சருமம் உரியலாம். முகப் பருக்கள் இருப்பவர்கள் சர்க்கரையைப் பயன் படுத்தும்போது முகத்தில் தழும்பு அல்லது ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்படலாம்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
காபித்தூளை அழகுக்காகப் பயன்படுத்துவது இப்போது சோஷியல் மீடியா வீடியோக்களில் மிகவும் அதிகரித்துவருகிறது. இதனால், எந்த ஒரு பலனும் கிடையாது. காபித்தூளைச் சருமத்தில் பயன்படுத்தும்போது, சரும துவாரங்கள் பெரிதாகி, தழும்புகள், கீறல்கள், காயங்கள் ஏற்படலாம்.
தூய்மையான ரோஸ் வாட்டர் ரோஜாப் பூக்களிலிருந்து இயற்கையான முறையில் எடுக்கப்படுவது. இதைப் பயன்படுத்துவதால் முகப்பொலிவு கிடைக்கும். ஆனால், கடைகளில் விற்கப்படும் ரோஸ் வாட்டர், எந்த அளவுக்கு நம்பகமானது என்று சொல்ல முடியாது. பெரும்பாலும், ரோஸ் எசென்ஸ் மட்டுமே சேர்க்கப்பட்டுதான் விற்கப்படுகிறது. அது, ரோஜா விலிருந்து இயற்கையாகத் தயாரிக்கப்படுவதல்ல.
இப்படி எசென்ஸ் சேர்க்கப்பட்ட ரோஸ் வாட்டரை முகத்துக்குப் பயன்படுத்தினால் கரு வளையம் போன்ற பிரச்னைகள் சீக்கிரத்திலேயே வரக்கூடும். எனவே, எசென்ஸ் சேர்த்த ரோஸ் வாட்டரை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பிக் பாஸ் சீசன் – 7: விஷ்ணுவிற்கு தரப்படுமா ரெட் கார்டு?
லியோ பாடல் காப்பியா? மீண்டும் சர்ச்சையில் அனிருத்
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்… ஆளுநர் காழ்ப்புணர்ச்சி: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு!