தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி உதகையில் இன்று (மே 12) தொடங்கியது.
கோடை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குப் பயணிகள் படையெடுத்து செல்கின்றனர்.
விடுமுறையை கழிக்க வரும் சுற்றலா பயணிகள் ரசித்து மகிழும் வகையில், மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
அந்த வகையில் இன்று (மே 12) உதகையில் 132வது தேசிய நாய்கள் கண்காட்சி தொடங்கியது. உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சவுத் ஆஃப் இந்தியா கேனல் கிரேட் இந்தியன் கிளப் ஆஃப் சவுத் சார்பில் நாய் கண்காட்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடுவர் பிலிப் ஜான் கலந்து கொண்டார்.
கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்களது நாய்களை உரிமையாளர்கள் போட்டிக்கு அழைத்து வந்தனர்.
இந்த போட்டியில் ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன், ராட்வீலா், கோல்டன் ரீட்ரீவர், சைபீரியன் ஆஸ்கி, பீகில், பெல்ஜியம் செப்பர்டு, சிட்சூ உள்ளிட்ட 470 நாய்கள் போட்டிகளில் பங்கேற்றன.
இன்று தொடங்கிய இந்த கண்காட்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் என அனைவரையும் கவர்ந்தது. போட்டியில் பங்கேற்ற நாய்கள், உரிமையாளர்கள் சொல்வதைக் கேட்டு செயல்பட்டது சுற்றியிருந்தவர்களை வியப்படைய செய்தது.
நாய்கள் பங்கேற்கும் போட்டிகளைப் பார்ப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் இறுதியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்கும் உதகை நாய்கள் கண்காட்சி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
டெல்லியில் ‘ஸ்பை’ டீசர் வெளியீடு!
பேராசிரியர் பணியிடங்கள்: போராட்டம் அறிவித்த அரசு மருத்துவர்கள்!