உடல் எடை அதிகரிப்புக்கும் கால்வலிக்கும் தொடர்பு உண்டா? உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இந்த கால்வலியைக் குறைக்க முடியுமா? இதற்கான தீர்வு என்ன?”உடல் எடை அதிகரிக்கும்போது, மூட்டுகளின் இணைப்புகளின் மீது அழுத்தம் கூடும். அதாவது இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியில் எடை அதிகரிக்க, அதிகரிக்க, அதன் அழுத்தம் மூட்டுகளில் பிரதிபலிக்கும். அதேபோல கணுக்கால் மூட்டுகளிலும் அழுத்தம் கூடும். அதன் விளைவாக வலி ஏற்படும். அதாவது வலி இருந்தால் நடக்கவோ, ஓடவோ முடியாது. நடக்காமல், ஓடாமல் இருந்தால் உங்களுக்கு மறுபடி வலி வரும்.
உடல் பருமன் அதிகரித்ததை நீங்களே உணர்கிறீர்கள் என்ற பட்சத்தில், முதல் வேலையாக உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைத்து, வலி குறைந்ததும் நடைப்பயிற்சியைத் தொடங்கலாம். நடக்க ஆரம்பித்ததும் மெள்ள மெள்ள வலி குறையத் தொடங்கும்.
கால்வலி, குறிப்பாக கணுக்கால்களில் வலி ஏற்படுவது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதன் அறிகுறியாகவும் இருக்கலாம். மூட்டுவலி என்பது உடல் பருமனால் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி எந்தக் காரணமும் இல்லை, ஆனாலும், கால்கள் முழுக்க வலிக்கின்றன என்றால் அது நீர்வறட்சி மற்றும் சத்துக்குறைபாடு காரணமாக இருக்கக்கூடும். எனவே, கால்வலிக்கான காரணம் உடல் பருமன்தானா அல்லது வேறெதுவுமா எனத் தெரிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது” என்கிறார்கள் ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாயவரம் சிறுத்தையும் கோயம்புத்தூர் ஆடும்:அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: காலமான புகழேந்தி… புதிய மாவட்டப் பொறுப்பாளர் யார்?