வேலை, வீட்டுச்சூழல் காரணமாக கடுமையான ஸ்ட்ரெஸும் அதனால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. இது உண்மையா? மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா? முடி உதிர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? Does mental health affect hair growth?
“முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முதலிடம் மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்ஸுக்குத்தான்.
மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வு பிரச்சினையை அலோபேஷியா அரியேட்டா, டெலோஜன் எஃப்ளுவியம் மற்றும் ட்ரைக்கோ டில்லோமேனியா என மூன்றாக வகைப்படுத்தலாம்.
முதல் வகையான ‘அலோபேஷியா அரியேட்டா’வில், ரத்த வெள்ளை அணுக்கள் ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் வேர்ப்பகுதியைத் தாக்கி, கூந்தல் வளர்ச்சியைத் தடை செய்வதுடன், முடி உதிர்வுக்கும் காரணமாகும்.
‘டெலோஜன் எஃப்ளுவியம்’ என்கிற நிலையில் அதீத மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, வளரும் நிலையில் உள்ள முடிக்கற்றைகள், உதிர்வதற்கு முன்பான ஓய்வுநிலைக்குத் தள்ளப்படும்.
அதிக டென்ஷன், கவலையில் இருக்கும் நாட்களைத் தொடர்ந்து முடி உதிர்வும் அதிகமாக இருப்பதற்கான காரணம் இதுதான். சாதாரணமாக தலை சீவும்போதும் தலைக்குக் குளிக்கும்போதும் கொத்துக் கொத்தாக முடி உதிர்வதெல்லாம் இந்தப் பிரச்சினையால்தான்.
அடுத்தது ‘ட்ரைக்கோடில்லோமேனியா’. அரிய வகை மனநல பாதிப்பான இதில், உடலில் எங்கு முடிகள் இருந்தாலும், அதைப் பிடுங்க நினைப்பார்கள். நெகட்டிவ் எண்ணங்கள், மன உளைச்சல், படபடப்பு, தோல்வி, தனிமை, அதீத களைப்பு, விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுகிறபோது, முடிகளைப் பிடுங்கி எறிய ஓர் உந்துதல் உண்டாகும்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள், தங்களது மனநலப் பிரச்னைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாத வரை, இவர்களது முடி உதிர்வுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது.
ஆறுதலான ஒரு விஷயம் என்னவென்றால், மன அழுத்தத்தால் உண்டாகிற முடி உதிர்வுப் பிரச்சினை நிரந்தரமானதல்ல. மன அழுத்தத்தைக் கட்டுப் படுத்தினாலே, கூந்தல் உதிர்வு சரியாகும்.
கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. புரதச்சத்தும் இரும்புச் சத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். அந்த வகையில் கறிவேப்பிலை, கீரை, தயிரில் ஊற வைத்த வெந்தயம், முட்டை, பனீர் போன்றவையும், நட்ஸ், பேரீச்சம் பழம், மீன் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் கூந்தலுக்கு எண்ணெய் வைக்காவிட்டாலும், வாரத்தில் 2-3 நாட்களுக்காவது தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகிப்பது, கூந்தல் வறட்சியைப் போக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: சுக்கு சூப்
”மம்மூட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ”: சமந்தா
குய்கோ உண்மையான அர்த்தம் என்ன?… இயக்குனர் அருள் செழியன் Exclusive பேட்டி!
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா?… வனிதா விஜயகுமாரை தாக்கிய மர்ம நபர்!
Does mental health affect hair growth?