சிலருக்கு தொடர்ந்து முகத்தில் பருக்கள் வந்து, அதனால் வடுக்கள் ஏற்பட்டு, முகம் முழுவதும் சிறு சிறு குழிகளும் தழும்புகளுமாக இருக்கும். இதைப் போக்க லேசர் சிகிச்சை உதவுமா? சருமநல மருத்துவர்களின் பதில் என்ன?
“பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் முகப்பரு வருவது இயல்பான விஷயம். ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்களினாலும் பரம்பரை மரபணுக்களாலும் முகப்பருக்கள் தோன்றும்.
எண்ணெய் கலந்த களிம்பு வகைகளைப் பயன்படுத்துவதாலும், ஆயில் மசாஜ் செய்வதும்கூட முகப்பருக்கள் வருவதற்கான ஒரு காரணம். பால் கலந்த எண்ணெய் உணவுகளை அதிகமாக உண்பதாலும் சிலருக்கு முகப்பருக்கள் வரும். எனவே முடிந்த அளவுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
முகத்தில் தோன்றும் பருக்களை சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது முற்றிப்போய் வடுக்களும் குழிகளும் ஏற்படும். முகப்பருக்களைப் போக்கும் மருந்துகளைச் சரியான விகிதத்தில் பயன்படுத்தி பருக்களின் வீரியத்தைக் குறைக்கலாம்.
வடுக்கள், குழிகள் மற்றும் தழும்புகளை லேசர், மைக்ரோ தெர்மோ ஆபரேஷன், தெர்மோ ரோலர் ஆபரேஷன் போன்ற சிகிச்சைகள் மூலம் ஓரளவுக்கு மட்டுமே சரிசெய்ய முடியும்.
மாத்திரை, களிம்பு உள்ளிட்ட மருந்துகளை சுயமாய் எடுத்துக்கொண்டால், தோலில் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவே, தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகி, முகப்பரு எதனால் வந்தது என்பதை முதலில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெறுவதே சிறந்த வழி” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டங்ஸ்டன் விவகாரம்… எடப்பாடியின் புளுகு எட்டு நொடிகூட நிலைக்கல : ஸ்டாலின் விமர்சனம்!
WTC புள்ளிப்பட்டியல் : இந்தியாவை அச்சுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
ரூ.1 லட்சம் போதும்.. 13 உலக நாடுகளை ரயிலில் சுற்றி பார்க்கலாம்!
அவரு டாக்டரா? கம்பவுண்டரா? – அப்டேட் குமாரு
திருவண்ணாமலை தீப விழா : டாஸ்மாக் மூடல்!