ஹெல்த் டிப்ஸ்: அதிகமாக வியர்ப்பது எடைக் குறைப்புக்கு உதவுமா?

Published On:

| By Kavi

நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களும், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் வியர்க்க விறுவிறுக்க காட்சியளிப்பார்கள். உண்மையில், வியர்வைக்கும் எடைக்குறைப்புக்கும் தொடர்பு உண்டா? ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் சொல்லும் பதில் என்ன?

“எக்கச்சக்கமாக வியர்வை வெளியேறும்படி உடற்பயிற்சி செய்துவிட்டால், எக்கச்சக்கமாக எடையும் குறைந்துவிடும் என நினைப்பது தவறு. நம் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதுதான் வியர்வையின் வேலை. அதாவது உடலின் வெப்பத்தைத் தணித்து, குளிர்விக்கும் இயல்பான நிகழ்வு அது என்று புரிந்துகொள்ளலாம்.

உதாரணத்துக்கு, நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், காரமாக ஏதாவது சாப்பிடும்போதும் உங்களுக்கு வியர்வை வெளியேறுவதைப் பார்ப்பீர்கள். அதன் மூலம் உங்கள் உடல் வெப்பநிலை தணிக்கப்படும். சிலருக்கு வியர்வை அதிகம் சுரக்கும். வேறு சிலருக்கு வியர்வை சுரப்பிகள் பெரிதாக ஆக்டிவ்வாக இருக்காது. வியர்வை சுரப்பிகள் ஆக்டிவ்வாக இல்லாதவர்களுக்கு என்னதான் வொர்க் அவுட் செய்தாலும் வியர்வை வெளியேறாது.

வியர்வை வெளியேறுவது என்பது பிரச்சினைக்குரியது அல்ல. கொஞ்சம்கூட வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதற்குத்தான் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வியர்வை எவ்வளவு வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு எடைக்குறைப்பும் இருக்கும் என்பது தவறான நம்பிக்கை.

எடைக்குறைப்பு என்பது உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு என இரண்டு விஷயங்களையும் பொறுத்தது. வியர்வை சுரப்பிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வேலை செய்யும். எனவே, அந்த விஷயத்தை நினைத்து பெருமைப்படவோ, குழம்பவோ, கவலைப்படவோ தேவையில்லை. உங்கள் உடற்பயிற்சியையும், நடைப்பயிற்சியும் தொடருங்கள்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போதும் இத்தோட நிறுத்திக்கலாம்: அப்டேட் குமாரு

Exclusive : குழந்தையுடன் இருந்த நடிகை கஸ்தூரி கைது!

2026க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை : திமுகவின் மாஸ்டர் திட்டம்!

கங்குவா விமர்சனம் : அன்றைக்கு அமீர்கான் இன்றைக்கு சூர்யா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share