பியூட்டி டிப்ஸ்: பாஸ்மதி ரைஸ் சாப்பிட்டால் மேனி பளபளக்குமா?

Published On:

| By Kavi

Eating basmati rice make skin glow?

வட இந்தியாவில் பாஸ்மதி அரிசியின் பயன்பாடு மிக அதிகம். சாதாரண அரிசிக்கு பதில் பாஸ்மதி அரிசியைச் சாப்பிடுவதால் எடை குறைந்து மேனி பளபளப்பாகும்… அதனால்தான் வட இந்தியர்கள் நல்ல கலரில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை? வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?

“பாஸ்மதி அரிசி சாப்பிட்டால் எடை குறைந்து மேனி பளபளப்பாகும் என்பது உண்மையல்ல. எந்த அரிசியானாலும் எடுத்துக்கொள்ளும் அளவு மிக முக்கியம்.

பொதுவாக, புலாவ், பிரியாணி, ஜீரா ரைஸ் போன்ற உதிரி உதிரியான சாத வகைகளுக்குதான் பெரும்பாலும் பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்துவோம்.

மற்ற அரிசி வகைகளைப்போல பாஸ்மதி அரிசி சாதத்தில் சாம்பார், ரசம், குழம்பு என ஊற்றிச் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்காது. சிலர் பாஸ்மதி அரிசியில் வெஜிடபுள் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள்.

அப்படிச் செய்யும்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதில் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட்டால் எடை அதிகரிக்காது. சருமத்துக்கு நன்மை தரும்.

100 கிராம் பாஸ்மதி அரிசியில் 364 கலோரிகள் இருக்கின்றன. அதில் கார்போஹைட்ரேட் 61 கிராம் இருக்கும். அதுவே சாதாரண பச்சரியில் 345 கலோரிகளும், கார்போஹைட்ரேட் 78 கிராமும் இருக்கும்.

எனவே, பாஸ்மதி அரிசியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், அதில் கலோரி சற்று அதிகம்தான்.

எந்த வகை அரிசியோ, சிறுதானியமோ, சப்பாத்தியோ…. எப்படிப்பட்ட கார்போஹைட்ரேட்டாக இருந்தாலும், கார்போஹைட்ரேட் ஒரு பங்கு என்றால் அத்துடன் காய்கறிகள் இரண்டு பங்கு என்ற அளவில் சாப்பிட்டால் எடை அதிகரிக்காது. சருமத்துக்கு நன்மை தரும்.

நிறைய காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடும்போது சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். நீண்ட நேரத்துக்குப் பசி எடுக்காது.

சிலருக்கு பாஸ்மதி அரிசி சாதத்தின் வாசனையும் அதன் உதிரி உதிரியான தன்மையும் பிடிக்கும். அதனாலேயே அதை அதிகம் சாப்பிடுவார்கள். அது பிடிக்காததால் குறைவாகச் சாப்பிடுவோரும் இருக்கிறார்கள். எனவே, அளவுதான் இதில் முக்கியம்…

நீரிழிவாளர்களுக்கான டயாபட்டிக் ரைஸ் என்று கிடைக்கிறது. அதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் மினரல் சத்துகள் அதிகமாகவும் இருக்கும்.

அதேபோல பாரம்பர்ய அரிசி வகைகளான கறுப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் நார்ச்சத்தும், மினரல்களும் அதிகமிருக்கும்.

அவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடைக் குறைப்பு எளிதாகும். மேனியும் பளபளக்கும். ஆனால், அவற்றையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தி கோட்’ – மோகன் ரீ இன்னிங்ஸ் ஆக அமையுமா ?

சம்பளத்த காணோம் ’ஜி’ : அப்டேட் குமாரு

கார்களின் மதிப்பு மட்டும் 40 ஆயிரம் கோடி … புருனே சுல்தானின் வியக்க வைக்கும் வாழ்க்கை!

அசைவ உணவு பிரியரா நீங்கள்… ஜாக்கிரதை… : சென்னையில் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share