மன அழுத்தத்தில் இருந்து விடுபட… பழக்கத்தின் காரணமாக…. ஸ்டைலுக்காக… ஃபன்னுக்காக… முக்கியமாக வாய் துர்நாற்றத்தை விரட்ட சூயிங்கம் மெல்லும் வழக்கம் பலரிடம் இருக்கிறது.
இந்த நிலையில், “வாய் துர்நாற்றப் பிரச்சினைக்கு சூயிங்கம் மெல்வது தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர, வாய் துர்நாற்றத்துக்கான காரணம் அறிந்து அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
“இந்த நிலையில் சூயிங்கம் மெல்வதால் பற்களில் சொத்தை உருவாவது தவிர்க்கப்படும். சாப்பாட்டுக்குப் பிறகு சுகர்ஃப்ரீ சூயிங்கம் மெல்வது, வாயைச் சுத்தப்படுத்துவதற்கு இணையானது. பற்களில் உணவுத்துகள்கள் தேங்காமல் தவிர்க்கும்.
பாக்கு, புகையிலை போல சிலருக்கு எப்போதும் எதையாவது மெல்லும் பழக்கம் இருக்கும். அவற்றோடு ஒப்பிடுகையில், சூயிங்கம் மெல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு.
ஆனாலும் சூயிங்கம் மெல்வது என்பது ஒருவித அடிக்ஷனாக மாறாமல் இருப்பதுதான் சரி. எப்போதாவது ஒரு மாறுதலுக்கு சூயிங்கம் மெல்வதில் தவறில்லை. சிலர், எப்போதும் சூயிங்கம் மென்றபடி இருப்பதைப் பார்க்கலாம். இனிப்புள்ள சூயிங்கம் என்றால், அது உடல்பருமன், பல் சொத்தை, இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, நீரிழிவு போன்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம்.
சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது ‘கம் பேஸ்’ (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள். இது இயற்கையான அல்லது செயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச் சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப், சுகர்ஃப்ரீ சூயிங்கம் என்றால் ஸைலிட்டால் (Xylitol) அல்லது செயற்கை இனிப்பூட்டிகள், நிறமிகள், மணமூட்டிகள் போன்றவை சேர்க்கப்படுகிறது. Does chewing gum fix bad breath?
சுகர்ஃப்ரீ சூயிங்கம்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்கள், மலமிளக்கி தன்மை கொண்டவை என்பதால், அவற்றை அதிகம் மெல்வதால் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்” என்று எச்சரிக்கிறார்கள். Does chewing gum fix bad breath?