‘நானெல்லாம் படுத்த பத்தாவது செகண்ட் தூங்கிடுவேன்…” எனச் சொல்பவர்கள், வாழ்வில் வரம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள். எல்லோருக்கும் அந்த வரம் வாய்ப்பதில்லை.
தூக்கமின்மை என்பது பலருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கும்நிலையில், தற்காலிக தூக்கமின்மை பிரச்சினையும் நிறைய பேருக்கு இருப்பதைக் கேள்விப்படுகிறோம்.
‘ரெண்டு நாளா தூக்கமே இல்லை….’, ‘போன வாரம் முழுக்க சரியாவே தூங்கலை…’ என்ற புலம்பல்களையும் பரவலாகக் கேட்கலாம்.
தற்காலிகத் தூக்கமின்மை குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.
தூக்கமில்லையே என்று கவலைப்பட ஆரம்பித்தால், அது ‘க்ரானிக் இன்சோம்னியா’ (Chronic Insomnia) எனப்படும் தீவிர தூக்கமின்மை பாதிப்புக்கு காரணமாகலாம்.
தூக்கமில்லாத இரவுகளில், அது பற்றியே யோசித்துக் கொண்டு, படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். பெட் ரூமிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.
செய்யாமல் விடப்பட்ட சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். துணிகளை மடிப்பது, அலமாரியை சுத்தம் செய்வது என அது எதுவாகவும் இருக்கலாம்.
தூக்கமின்மையிலிருந்து விடுபட உதவ அரோமாதெரபி பெரிதும் உதவும். தூக்கமில்லாத நாள்களில் குறிப்பிட்ட சில அரோமா ஆயில்களின் மணத்தை மோந்தபடி இருந்தாலே, சில நிமிடங்களில் தூக்கம் வரும்.
இன்று நம்மில் பலரும் சூரிய வெளிச்சமற்ற, ஏசி செய்யப்பட்ட, மூடிய அறைகளுக்குள்தான் வேலை செய்கிறோம். வெயிலில் போனால் கருத்து விடுவோம் என தலை முதல் கால் வரை மூடிக்கொள்கிறோம். இதற்கு ‘சிக் பில்டிங் சிண்ட்ரோம்’ (Sick building syndrome) என்று பெயர். இதுவும் நல்ல உறக்கத்தை பாதிக்கும்.
காலையில் சூரிய உதயத்தின்போது அந்த வெயில் உடலில்படும்படி சில நிமிடங்கள் இருக்கலாம். அதேபோல மாலை வேளையில், சூரிய அஸ்தமனத்தின் போதான வெளிச்சமும் உடலில் படட்டும். கண்கள் மூலம் சூரிய ஒளியானது மூளையை எட்ட அனுமதிக்கும்போது, பகல் வேளையில் உடலும் மூளையும் எனர்ஜியோடு இருக்கும். மாலை வேளைக்குப் பிறகு உடலும், மனதும் அமைதியடையும். இரவில் ஆழ்ந்த உறக்கம் உங்களைத் தழுவும்.
எல்லோருக்கும் எல்லா நாள்களிலும் தூக்க நேரம் ஒன்றுபோல இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நாள்களில் வழக்கத்தைவிட ஒன்றிரண்டு மணி நேரம் அதிகமாகத் தூங்குவதும், ஒருசில நாள்களில் தூக்கமில்லாமல் இருப்பதும் நடக்கும். இது இயல்பானதுதான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்து அல்வா!
சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவு: ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்!
எலக்ஷென் ஃப்ளாஷ்: வராத கூட்டணித் தலைவர்கள்.. கோபமாய் புறப்பட்ட நட்டா