தற்போது முதுகுவலியையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கழுத்துவலியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குறிப்பாக, இளம் வயதினர்தான் கழுத்துவலியால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் மொபைல்போன் பயன்பாடு.
மொபைல்போனை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்தியிருக்கிறோம் (Screen Time) என்பதை செக் செய்து பார்க்க முடியும். உதாரணத்துக்கு 3 மணி நேரம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 3 மணி நேரம் பயன்படுத்தியவரின் கழுத்து கீழ் நோக்கிய நிலையில் குனிந்தே இருந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இதுதான் கழுத்துவலிக்கு முக்கியமான காரணம். மேலும், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் பணியாற்றுபவர்கள் சரியான நிலையில் உட்காராமல் குனிந்து திரையைப் பார்ப்பதுபோல் பணியாற்றினாலும் கழுத்துவலி ஏற்படலாம்.
வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் அலுவலகத்தில் உள்ளது போல் முறையாக அமர்ந்து பணியாற்றுவதில்லை.லேப்டாப்பை படுக்கையில் வைத்து, தரையில் வைத்துக்கொண்டு, சோபாவில் உட்கார்ந்து மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு குனிந்த நிலையில் பணியாற்றுகின்றனர். இவையும் கழுத்துவலிக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
அடுத்ததாக, நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதலும் கழுத்துவலி ஏற்பட காரணமாக உள்ளது. பைக், கார் என எதுவாக இருந்தாலும் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்கும்போது கழுத்துவலி ஏற்படலாம்.
அதிலும் டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சிலர் சீட்டில் உட்கார்ந்து குனிந்தபடியே செல்போன் பார்த்துக்கொண்டே செல்வார்கள். இதுபோன்ற காரணங்களால்தான் இளம் வயதினர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதைப் பார்க்கிறோம்.
இதைத் தவிர்க்க… செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். கம்ப்யூட்டர், லேப்டாப் பயன்படுத்தும்போது சரியான நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும்.
கார், பைக் போன்ற வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்து அலுவலகத்துக்குச் செல்வது போன்ற விஷயங்களைத் தவிர்க்க முற்பட வேண்டும். ரயில் மற்றும் பஸ் போன்றவை ஓரளவுக்கு பரவாயில்லை.
கழுத்துவலி வந்துவிட்டது என்றால் முதலில் மொபைல்போனை பார்க்கும் நேரத்தை பாதிக்குப் பாதியளவு குறைத்துவிடுங்கள். பாதி அளவு குறைத்தாலே மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடியும்.
அடுத்து, வலியைக் குறைப்பதற்கு மாத்திரைகள், பிசியோதெரபி சிகிச்சைகள் பயனளிக்கும். வலி மீண்டும் வராமல் இருக்க கழுத்தை வலுப்படுத்தும் (Neck Strengthening) உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
இந்த உடற்பயிற்சிகள் தசை நார்களை வலுப்படுத்தி மீண்டும் வலி வராமல் தடுக்கும்” என்கிறார்கள் முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : உருவாகும் புயல் சின்னம் முதல் இந்தியா – வங்கதேசம் 2வது டி20 போட்டி வரை!
கிச்சன் கீர்த்தனா : டேட்ஸ் எள்ளு உருண்டை
பியூட்டி டிப்ஸ்: டீன் ஏஜ் பருவத்தினரே… உங்களை அழகாக்கும் விஷயங்கள் எது தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: மது அருந்தாதவர்களுக்கும் ‘ஃபேட்டி லிவர்’… என்ன காரணம்?
விஜய்சேதுபதியின் ‘டிரைன்’ : படப்பிடிப்பு நிறைவு!
சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்கள்… அமித்ஷா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!