கொஞ்சம் எடை கூடினால் முன்பெல்லாம் இவ்வளவு கவலைப்பட்டதில்லை. இன்று பருமன் என்பது மன உளைச்சலைத் தரக்கூடிய பிரச்சினையாக மாறிவிட்டது.
இந்த நிலையில் மக்களின் அந்தக் கவலையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, உடல் இளைக்கச் செய்வதாக உத்தரவாதம் தரும் போலி விளம்பரங்களும் வியாபாரங்களும் பெருகிவிட்டன. இதைத் தவிர்க்க எடை கூடுவதாக உணர்ந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன?
பொதுவாகவே நம் எடையின் அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். வருடம் ஒருமுறையாவது நம் உடலின் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
எடை அதிகரிப்பதாக உணர்ந்தால் உணவின் அளவைக் குறைக்க வேண்டும். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், சில நாட்களில் பழகிவிடும். நம் உணவின் அளவுக்கேற்ப குடலின் அளவும் சுருங்கும். பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
‘கொழுக் மொழுக்’ குழந்தைகள் ஆரோக்கியமானவர்கள் என்று நினைக்கக் கூடாது. குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித் தரவும் கூடாது. சமீப வருடங்களாக குழந்தைகளிடம் உடல் பருமன் அதிகரித்து வருவதால் சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டுவிட்டால் வளர்ந்தபிறகு எடையைக் குறைப்பது சிரமமாகிவிடும்.
உங்கள் எடை கூடுவதாக உணர்ந்தால், முதலில் உங்களின் குடும்ப மருத்துவர் அல்லது பொது மருத்துவரையே பார்க்கலாம். என்ன செய்தாலும் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளும் உண்டாகின்றன என்றால் நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்கலாம்.
எடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் உணவின் பங்கே பிரதானம். என்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடக் கூடாது என்று தெரிந்துகொண்டாலே, எடைக்குறைப்பில் நமக்கு வெற்றி நிச்சயம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் இந்தியா Vs இலங்கை ஒருநாள் போட்டி முதல் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல… ஏன்?