நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக்கொண்டு பாடாகப்படுத்திவிடும்.
“சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்சினையான தசைப்பிடிப்பு ஏற்படும்போது நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சி செய்ய கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. அந்த இடத்தில் தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதால், உள் காயம் ஏற்படும்.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது. தசைப்பிடிப்பு ஏற்படும்போது முதலில் ஓய்வு எடுக்க வேண்டும். வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். நல்லெண்ணெயில் உப்பு கலந்து தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை வியர்க்கச் செய்ய வேண்டும். குணமாகும் வரை இப்படி ஒரு நாளைக்கு இருமுறை செய்யலாம்.
அடிபட்டு, தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும். எனவே, அடிபட்ட இடத்தில் எண்ணெயை ஊற்றி, மிதமாக அல்லது மெதுவாகத் தேய்துவிட வேண்டும்.
அப்படியும் தசைப்பிடிப்பு தளரவில்லையென்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்” என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : காங்கிரஸின் ஆளுநர் மாளிகை முற்றுகை முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா : முள்ளங்கிச் சட்னி
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அனுஷம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: சுவாதி!
அட்லீ நிறம் குறித்து பேசிய கபில் சர்மா… சின்மயி கொடுத்த பதிலடி!
பட்டை தீட்டிய சென்னை… ரூ. 1.60 கோடிக்கு தட்டி தூக்கிய மும்பை : யார் இந்த மதுரை கமலினி?