1 ரூபாய்க்கு சட்டை வாங்க முண்டியடித்த இளைஞர்கள்!

டிரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை தனியார் ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக இன்று (அக்டோபர் 18) ஒரு ரூபாய்க்கு சட்டை விற்கப்பட்டது.

வாழ்வின் இருளை நீக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்வார்கள்.

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், மக்கள் அனைவரும் தீபாவளி ஷாப்பிங்கில் மும்முரமாகியுள்ளனர்.

பட்டாசு, துணிகள் வாங்க கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடும் மழையைக்கூட பொருட்படுத்தாமல் மக்கள் தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளும் தீபாவளி ஆஃபர்களை அள்ளி குவித்துள்ளது.

அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட சட்டையை இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.

தஞ்சாவூர், மதகடி பஜாரில் உள்ள தனியார் ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக முதலில் வரும் நூறு நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சட்டை விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் இன்று கடை திறப்பிற்கு முன்பே அதிகாலையில் ஏராளமான இளைஞர்கள் கடை முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடை திறந்ததும் இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு, 1 ரூபாய்க்கு சட்டையை போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

தஞ்சாவூரில் 1 ரூபாய்க்கு தீபாவளி சிறப்பு விற்பனையாக சட்டை விற்கப்பட்டது அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை கவர்ந்துள்ளது.

செல்வம்

நாட்டின் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

மும்பை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றது ஏன்?

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *