தமிழ் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறிது காலத்திற்கு சமூக ஊடகங்களிலிருந்து இடைவெளி எடுக்கப் போவதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், ஆகிய படங்களை இயக்கியுள்ளார். குறைந்தளவு படங்களை இயக்கியிருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். குறிப்பாக கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் இவரை தமிழ் திரையுலகில் பெரிதளவு அடையாளப்படுத்தியது.
இதன்மூலம் இவரது முந்தைய படங்களையும் தேடிப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு இவரது அடுத்த படம் குறித்த தகவல் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ தான் சிறிது காலத்திற்கு அனைத்து சமூக ஊடகங்களிலிருந்தும் இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் “ எனது அடுத்த படத்தின் அறிவிப்போடு சீக்கிரமாக திரும்ப வருவேன். அதுவரை உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், அன்புடன் லோகேஷ் கனகராஜ்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் அடுத்த படத்தின் அப்டேட்டை சொல்லிவிட்டு போங்க என்று கூறி வருகின்றனர்.
மேலும் லோகேஷின் அடுத்த படம் ‘தளபதி 67’ என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் தளபதி 67 அப்டேட்டை உறுதிப்படுத்திவிட்டு செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோனிஷா
யுவனின் ‘சாச்சிட்டாலே’ : காத்திருக்கும் ரசிகர்கள்!