கூந்தலின் வேரை பலப்படுத்த, வெளியே தடவும் எண்ணெயைவிட, உள்ளுக்குள் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியமான ஒன்று. முடி உதிர்வதற்கு, சத்து குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால், சத்தான உணவு மிக அவசியம். அந்தவகையில் கூந்தலை வளமாக்கும் உணவுகள் இதோ…
காலிஃப்ளவர் இலை, அரைக் கீரை, கோங்குரா எனப்படும் புளிச்ச கீரை, முருங்கை கீரை, பசலை கீரை, கருப்பு எள்ளு (எள்ளு மிட்டாய், எள்ளு துவையல், எள்ளு பொடி போன்றவை), எல்லாவிதமான பயறு மற்றும் பருப்பு வகைகள், பால், கேரட், பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம், அவல், முளைவிட்ட தானியங்கள், உலர் திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, கொட்டையுள்ள கருப்பு திராட்சை, அசைவம் என்றால் மீன், முட்டையின் வெள்ளைக் கரு…
இவற்றையெல்லாம் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொண்டு வந்தாலே, ஊட்டச்சத்து குறைபாடு என்பதே இல்லாமல் போய்விடும்.
முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் எல்லாமே இந்த உணவுகளில் இருக்கின்றன. இவற்றை சாப்பிட ஆரம்பித்தாலே, முடி உதிர்வது குறைந்து விடும். கூந்தல் வளமையாகும்.
முக்கியமாக… கூந்தலுக்கு கருமை நிறத்தைக் கொடுப்பதுடன், அனீமியா வராமலும் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது கறிவேப்பிலை. இதில் துவையல், பொடி செய்து உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமை புல் சாறும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். கோதுமை புல்லை நீங்களே வீட்டில் தயரிக்கலாம். முளைகட்டிய கோதுமையை ஒரு சின்ன பானையில், மண் நிரப்பி அதில் போட்டு வைத்தால், ஏழாவது நாள் புல் போல முளைத்து வரும். ஆறேழு நாட்களில் வளரும் புல்லை நறுக்கி எடுத்து அரைத்து, அந்தச் சாற்றைக் குடித்தால் கூந்தல் வளமாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல் ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் வரை!
சண்டே ஸ்பெஷல்: இடியாப்பம்… இப்படிச் செய்து பாருங்கள்… ஈஸியா வரும்!
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? போட்டுடைத்த நத்தம், வேலுமணி
யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா : யார் இந்த மனோஜ் சோனி?