கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் #ஐயோஅம்மா_கொல்றாங்க என்ற ஹேஷ்டேக் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. பாஜகவினர் மற்றும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் தான் இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அது ஏன்? திடீரென அஜித் ரசிகர்கள் தான் கைது செய்யப்பட்டபோது கலைஞர் சொன்ன இந்த வார்த்தைகளை எதற்காக ட்ரெண்ட் செய்கிறார்கள்?
அதற்கான காரணம் சமீபத்தில் ’தமிழ்நாடு நவ்’ என்ற யூடியூப் சேனலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதுதான்.
அப்போது அவரிடம் சமகால அரசியல், கலைஞர் உடனான உறவு, செயல்படுத்திய திட்டங்கள், சினிமா மற்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளும் கேட்கப்பட்டது. அதற்கெல்லாம் அவர் தனக்கே உரித்தான பாணியில் பதில் கொடுத்தார்.
அப்போது அவரிடம் நெறியாளர், “அஜித், விஜய் படங்கள் எல்லாம் பாத்திருக்கீங்களா சார்?” என்று கேட்கிறார்.
அதற்கு அமைச்சர் துரைமுருகன், “அஜித்னா யாரு?”என்று கேட்கிறார். பின்னர், சிறிது நேரம் யோசிக்கும் அவர், “தலன்றாங்களே அவரா?” என்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை ‘தமிழ்நாடு நவ்’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்த வீடியோவில், “அஜித்னா யாரு”என்று துரைமுருகன் கேட்பதை மட்டும் கட் செய்து பாஜகவினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட, அவர் பேசியதை முழுமையாக பார்க்காத சிலர், துரைமுருகன் மற்றும் கலைஞரை விமர்சனம் செய்து கடந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் #ஐயோஅம்மா_கொல்றாங்க என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு வருகின்றனர்.
முதல்வர் கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, நடிகர்களை இப்படி விழாக்களுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம் என அஜித் பேச… அதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிய வீடியோவையும் ஷேர் செய்து, ‘இதுதான் எங்கள் அஜித்.
அமைதியா இருக்கிறவங்கள சீண்டிப் பார்க்காதீங்க, அப்புறம் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்’ எனவும் அஜித் ரசிகர்கள் திமுகவினரை எச்சரித்துள்ளனர்.
மேலும், அஜித் குமார் மீது கை வைப்பதும், பாகுபலியின் வாள் மீது கை வைப்பதும் ஒன்று தான் என துரைமுருகன் போட்டோவை போட்டு அஜித் ரசிகர்கள் எச்சரித்து ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பாஜக ஊடகபிரிவினர் கலைஞர் கைது செய்யப்பட்ட வீடியோவை மீம்ஸ்களுடன் எடிட் செய்து #ஐயோஅம்மா_கொல்றாங்க என்ற ஹேஷ்டேக்கை இணைத்து அஜித் ரசிகர்களை டேக் செய்துள்ளனர்.
அதேநேரம் இதற்கு பதிலடி கொடிக்கும் வகையில், திமுகவினர் துரைமுருகன் பேசிய ப்ரோமோ காட்சிகளை முழுமையாக பதிவிட்டு,
“அஜித்தை அழகா ‘தல தல’ ன்னு சொல்றாரு அமைச்சர்! அதற்குள்ள இதை தவறா திரிச்சு வெளியிட்டுருக்காங்க பாஜகவினர். அதை அஜித் ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முரசொலி மாறன் பிறந்தநாள் : முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!
குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர்: அரசு அதிரடி உத்தரவு!
தங்க நகை வாங்க போறீங்களா… சவரன் எவ்வளவு தெரியுமா?