சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 7 சதவீத மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டாலே இந்த உணவுகளை சாப்பிடலாம், இதை உண்ணக் கூடாது என பலரும் அறிவுரை சொல்வதுண்டு. அதுகுறித்து இச்செய்தி குறிப்பில் காணலாம்.
அதிக சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை நோய்:
அதிக சர்க்கரை சாப்பிடுவது மட்டுமே நீரிழிவு நோயை ஏற்படுத்தாது, ஆனால் சில சந்தர்ப்பங்களில் இது ஒரு காரணியாக இருக்கலாம்.
அதிக எடை, உயர் ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை (குறிப்பாக 45 வயதுக்கு மேல்) போன்றவையும் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இனிப்பு, செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவில் வெற்று கலோரிகள் இருப்பதால் இதனால் நீரிழிவு பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்கின்றன சமீபத்திய ஆய்வறிக்கைகள்.
கார்போஹைட்ரேட்டுகள் ஆபத்தா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கார்போ ஹைட்ரேட் உணவுகளை உண்ணவே கூடாது என சிலர் சொல்வார்கள்.
அது முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. கார்போ ஹைட்ரேட்டுகளின் வகை மற்றும் நீங்கள் சாப்பிடும் கார்போஹைட்ரேட்டின் அளவு ஆகியவற்றை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு எடுத்துக்கொண்டாலே போதும்.
உதாரணமாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவான பீட்சா, பர்கர், பிரட், பாஸ்தா, போன்ற பேக்கேஜ் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சில கார்போஹைட்ரேட்டுகளில் வைட்டமின்கள், தாத்துக்கள், நார்ச்சத்து உள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
மாவுச்சத்து நிறைந்த உணவுகள்:
மாவுச்சத்துகள் உள்ள உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரட், பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு, சோளம், பீன்ஸ் போன்ற காய்கறிகளில் அதிகளவில் மாவுசத்து உள்ளது. நீரிழிவு நோயை தடுப்பதற்கு இந்தவகை மாவுசத்து உணவு வகைகளை அளவாக எடுத்துக் கொள்ளலாம்..
பழங்கள் உண்ணலாமா?
சர்க்கரை நோய் வந்தவுடன் பெரும்பாலனோர் பழங்கள் உண்பதை விட்டு விடுகின்றனர். பழங்கள் உண்பதால் ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரிக்காது. சாப்பிடும் பழங்களை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றில், வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது, சர்க்கரைநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதை தவிர ஆப்பிள், கிவி, நாவல் பழம், கொய்யா ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
அசைவ உணவுகள் :
பதப்படுத்தப்பட்ட, அதிக மசாலா சேர்க்கப்பட்ட கறி உணவுகள், பொறித்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
புரதசத்துக்காக மீன், முட்டை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.
- க.சீனிவாசன்
திருப்பதி: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் யாத்திரையை ஒத்திவைக்க அறிவுறுத்தல்!
“பொறித்த” அல்ல..
பொரித்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.