dhoni meets ram charan

ராம் சரண் – தோனி சந்திப்பு: ஸ்மார்ட் ஆன கேப்டன் கூல்!

ஆர்.ஆர்.ஆர் படத்திற்குப் பிறகு உலக அளவில் நடிகர் ராம் சரணுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் ராம் சரணின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் தெலுங்கு படம் கேம் சேஞ்சர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ராம் சரண் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ராம் சரண் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தோனியை நேரில் சந்தித்துப் பேசினார்.

2010 ஆம் ஆண்டு தோனியும் ராம் சரணும் பெப்சி விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த புகைப்படங்களையும் தற்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சேர்த்து நாஸ்டாலஜிக் மொமென்ட்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் தோனி, ராம் சரணின் இந்த திடீர் சந்திப்பு மீண்டும் ஓர் புதிய விளம்பரப் படத்தில் இணைந்து நடிப்பதற்காக தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், தோனி என்டர்டைன்மென்ட் சார்பில், தோனி தயாரிப்பில் ராம் சரண் நடிக்கப் போகிறார் என்ற ரூமர்களும் பரவத் தொடங்கி விட்டது.

ஆனால் மரியாதை நிமித்தமாக தான் தோனியை சந்தித்து பேசினார் என்று ராம் சரண் தரப்பில்  கூறப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தோனி புது ஹேர் ஸ்டைலில் ஸ்மார்ட் ஆக இருக்கும் புகைப்படங்கள் டிரெண்டாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதே ஹேர் ஸ்டைலில் நடிகர் ராம் சரணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாக பரவி வருகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்: கூட்டணி முடிவுகள் வெளியாகுமா?

ஷிகர் தவானுக்கு விவாகரத்து வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts