இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தில் தேசியக் கொடியை மாற்றியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆவது சுதந்திர தின விழாவை இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாட உள்ளது.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது சமூக வலைதள முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றியுள்ளனர்.
தோனியின் தேசப்பற்று
இதனை தொடர்ந்து, இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மற்றும் சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தேசத்திற்காக களத்தில் விளையாடுகிறோம், முகப்பு படத்தை மாற்ற மாட்டோமா என்று தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றியுள்ளார்.
தல தோனி பெயரை சொன்னாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் முழ்கிவிடுவர். தற்போது, தோனியின் முகப்பு படம் ரசிகர்கள் மத்தியில் அவரது தேசப்பற்றை வெளிப்படுத்துவதோடு அதிக கவனத்தையும் பெற்றுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் டிரண்டாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், தோனி ரசிகர்கள் சிலர் அவர்களது முகப்பு படங்களை தேசிய கொடிகளாக மாற்றியும் வருகின்றனர்.
மோனிஷா