மெரினா கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை டிஜிபி சைலேந்திரபாபு தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய செயலுக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக சனிக்கிழமையிலிருந்தே சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக விளங்கும் சென்னை மெரினா கடற்கரையில் விளையாட்டு பொருட்கள், சிற்றுண்டி, குளிர்பானம், துரித உணவகம் என கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன.
நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் மெரினா கடற்கரையில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பொது மக்கள் அனைவரும் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்த போது சிறுவன் ஒருவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக நீரில் தத்தளித்த சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் சிறுவன் இயல்பு நிலைக்கு வரவில்லை.. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைப் பயிற்சிக்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனுக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார். தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
டிஜிபி முதலுதவி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
- க.சீனிவாசன்
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பணி !