திகார் சிறையா, மசாஜ் பார்லரா?: ஆம் ஆத்மி அமைச்சரின் வீடியோ!

டிரெண்டிங்

டெல்லி திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பாடி மசாஜ் அளிக்கப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இன்று (நவம்பர் 19) அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் சத்யேந்திர ஜெயின். சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்த இவர் மீது 2017ஆம் ஆண்டு சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சத்யேந்திர ஜெயின் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் ரூ.4.51 கோடியை அமலாக்கத்துறை முடக்கியது. தொடர்ந்து, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த 30ஆம் தேதி கைது செய்தது.

தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் திகார் சிறையில் அவருக்கு தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படுவதாக ஏற்கனவே அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்தசூழலில் திகார் சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி பதிவாகியுள்ள வீடியோவில், சத்யேந்திர ஜெயின் படுத்துக்கொண்டு பேப்பர் ஒன்றை படித்துக்கொண்டிருக்க, அவரது கை, கால் விரல்களுக்கு ஒருவர் ஆயில் மசாஜ் செய்துவிடுவது பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 14ஆம் தேதி பதிவாகியுள்ள வீடியோவில், கட்டிலில் படுத்திருக்கும்அமைச்சரின் காலை ஒருவர் பிடித்துவிடுகிறார். பிறகு தலைக்கு மசாஜ் செய்துவிடுகிறார்.

செப்டம்பர் 21ஆம் தேதி பதிவாகியுள்ள வீடியோவில் சிறை அறையில் அவரைத் தவிர 4 பேர் இருக்கின்றனர். அப்போதும் ஒருவர் அமைச்சருக்கு மசாஜ் செய்துவிடுவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள, பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா, “அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையை மசாஜ் பார்லராக மாற்றியுள்ளார். திகார் சிறையை டெல்லி அரசு நிர்வகிக்கிறது. அனைத்து சிறை விதிகளையும் மீறியுள்ளார் சத்யேந்திர ஜெயின்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரியா

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு?  – 6 பேர் வீடுகளில் அதிரடி சோதனை!

இலவச வேட்டி, சேலை: இந்த ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *