அன்புள்ள அம்மா..சிறுமியின் கடிதத்தால் நெகிழ்ந்த தாய்!

Published On:

| By Jegadeesh

தன்னுடைய தாய்க்கு சிறுமி ஒருவர் எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நம்மை யாராவது பாராட்டியோ அல்லது நாம் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்படும் நேரங்களில் நமக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை பேசினாலே நாம் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர ஆரம்பித்து விடுவோம்.

அப்படித்தான் 6 வயது பெண் குழந்தை தன் அம்மாவுக்கு எழுதியுள்ள கடிதம் சமூகவலைதளங்களில் லைக்குகளை பெற்று வருகிறது.

Shematologist MD என்ற ட்விட்டர் பயனாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காகிதத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘அன்புள்ள அம்மா.. உங்களுக்கு கடினமான நாளாக அமைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.’ என்று கூறியுள்ளார். கடிதத்தின் கீழே இரண்டு ஹார்ட்டின்களையும் வரைந்துள்ளார்.

தன் 6 வயது மகளின் இந்த பேரழகான குறிப்புடன், ‘இப்போது தான் இது கண்ணில்பட்டது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை இதை பத்திரமாக பாதுகாப்பேன்.’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் அந்த குழந்தையின் தாய்.

இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒரு நபர் “என்றைக்காவது மோசமான நாள் வரும்போது அதைப் பாருங்கள். கவலைகள் எல்லாம் பறந்து போகும்.’ என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஒரு படி முன்னே…ஒரு படி வலிமையாக: ரிஷப் பண்ட் கொடுத்த அடுத்த அப்டேட்!

லியோ படக்குழுவினரின் வைரல் புகைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share