இளம் வயதிலேயே சிலருக்குக் கழுத்துக்குப் பின்னாலும் அக்குள் பகுதியிலும் கருமையான படலம் இருக்கும். ஃபேர்னெஸ் க்ரீம், காஸ்ட்லி சோப், ஸ்கிரப் என எல்லாம் உபயோகித்தும் கருமை மறையாது. பார்லர் அழைத்துச் சென்று ப்ளீச்சும் செய்து பார்த்தாலும் நீங்காது.
இப்படி எதற்குமே மறையாத அந்தக் கருமைக்கு என்ன காரணம்… இதற்குத் தீர்வே கிடையாதா? இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ் சொல்லும் விளக்கம் இதோ…
“நிறைய பேருக்கு இப்படி கழுத்தைச் சுற்றி, அக்குள் பகுதியில், தொடை இடுக்குகளில் வெல்வெட் போன்ற கரும்படலம் இருப்பதைப் பார்க்கலாம்.
அதை அழுக்கு என நினைத்து விதம்விதமான சோப், க்ரீம், ஸ்கிரப் எல்லாம் உபயோகித்துத் தேய்த்து அகற்ற நினைப்பவர்கள். உண்மையில், அது அழுக்கு அல்ல. அதற்கு ‘அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ்’ (Acanthosis nigricans) என்று பெயர்.
இதை சோப்போ, ஸ்கிரப்போ, ப்ளீச்சோ உபயோகித்து நீக்க முடியாது. இந்தப் பிரச்னைக்கான காரணமே உடல் பருமனும், இன்சுலின் ரெசிஸ்டன்ஸும்தான்.
நம் உடலில் உள்ள செல்கள், குளுக்கோஸை பயன்படுத்தித்தான் ஆற்றலைப் பெறும். இந்த குளுக்கோஸை செல்களுக்குள் கொண்டு செல்லும் வேலையை இன்சுலின் என்ற ஹார்மோன் செய்கிறது.
இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்ற நிலையில், நம் உடலின் செல்கள் இந்த இன்சுலினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இதன் விளைவாக கழுத்தைச் சுற்றி, அக்குள் பகுதியில், தொடை இடுக்குகளில் எல்லாம் கரும்படலம் ஏற்படும்.
எனவே, மருத்துவரிடம் சென்று முறையான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். உடல் எடை அதிகமிருந்தால் அதைக் குறைப்பதற்கான வழிகளைச் செய்யுங்கள்.
பிரச்சினைக்கான மூல காரணம் தெரியாமல் நீங்களாக வீட்டு சிகிச்சைகளையோ, ப்ளீச்சிங் செய்வது போன்ற மோசமான பார்லர் சிகிச்சைகளையோ செய்து, பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தாதீர்கள்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் அதிமுக மா.செ. கூட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புளிக்குழம்பு
டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும்… விஜய்யை விமர்சித்த உதயநிதி
கோவை டைடல் பார்க்… 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!