ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்றாலும், உடற்பயிற்சி நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுத்தாலும், அளவுக்கு அதிகமாகும்போது அதுவே நமக்கு ஆபத்தினையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
தினசரி 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம். வாரத்தில் 150 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி தேவை. வயதுக்கேற்ப சிலர் சற்று கூடுதலாக கடினமான உடற்பயிற்சி செய்வதுண்டு.
அதிக உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள கலோரிகள் மிக விரைவாக குறையும். இதனால் ரத்தச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு உடல் பலவீனமடையும்.
மேலும், தொடர்ந்து தீவிரமாக உடற்பயிற்சி செய்வதன் காரணமாக தசைகள் அதிகமாக இறுகுவதால் அது வலியை ஏற்படுத்தும். நமக்கு தெரியாமலேயே நமது உடல் மிகவும் பலவீனமடைய தொடங்கும். அதிக சோர்வு ஏற்படும். Dangers of Excessive exercise
நமது உடல் அதிகமாக சோர்வடையும்போது நமது உடலில் உள்ள கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவை ஆற்றலுக்காக உறிஞ்சப்படும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். Dangers of Excessive exercise
எனவே உங்கள் உடல்நிலை, வயதுக்கேற்ற வகையில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்வதே நல்லது” என்கிறார்கள்.